மாவட்டம் பற்றி
கன்னியாகுமரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய (1672 சதுர கி.மீ) மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறது. கல்வியறிவில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக விளங்குகிறது. இடவடிவமைப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வேறுபட்டு நிற்கிறது. உலகத்தில் இங்கு மட்டுமே சூரியன் உதயத்தினையும், சூரியன் மறைவினையும் ஒரே இடத்தில் பார்க்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது.
இம்மாவட்டமானது மூன்று பக்கங்களிலும் 71.5 கி.மீ நீளம் கடல்களால் சூழ்ந்துள்ளது. இந்த சிறிய மாவட்டமானது, நீண்ட நெல் வயல்களினாலும், தென்னந்தோப்புகளாலும், ரப்பா் தோட்டங்களாலும், அரிய வகை காடுகள், அரிய வகை மணல்தாதுக்களை கொண்ட மேற்கு கடற்கரை மற்றும் எழில்மிகு மேற்குத்தொடா்ச்சி மலை பிரதேசங்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க