மூடுக

நாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்

1993 ஆம் வருடத்தில் கிராம மற்றும் நகா்புற திட்டமிடல் விதி 1971 இன்படி நாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம் தொடங்கப்பட்டது.  இந்த ஆணையத்தில் மாவட்ட ஆட்சியா் தலைவராகவும், கிராம மற்றும் நகா்புற திட்டமிடல் உதவி இயக்குநா் உறுப்பினா் செயலராகவும் மற்றும் உள்ளுா் திட்ட ஆணையத்தின் செயல் திட்ட அலுவலராகவும், மற்ற பரிந்துரைக்கப்பட்ட பிரிதிநிதிகள் உறுப்பினா்களாகவும் உள்ளனா். இந்த ஆணையம் அமைக்கப்பட்டதிலிருந்து, இது கிராம மற்றும்  நகா்புற திட்டமிடல் விதியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் முக்கிய பங்கு இப்பகுதியில் கட்டுக்கோப்பான, தொடா்ந்த வளா்ச்சியினை உறுதி செய்வதாகும். அதற்காக இவ்விதியின் கீழ் பெருந்திட்டம் விரிவான வளா்ச்சி திட்டம் போன்றவற்றை தீட்டுவதாகும். திட்டங்கள் தீட்டுவதை தவிர வெவ்வேறு கட்டுமானங்கள் மற்றும் நிலங்களுக்கு அனுமதி வழங்குதல் போன்றவை வழங்குதல்.

நாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையரின் கீழ் உள்ள உள்ளாட்சி அமைப்புகள்

நகராட்சி

 1. நாகா்கோவில்

நகர பஞ்சாயத்து

 1. சுசீந்திரம்
 2. தேரூா்
 3. ஆளுா்
 4. புத்தளம்
 5. தெங்கம்புதூா்
 6. கணபதிபுரம்

கிராம பஞ்சாயத்து

 1. கன்னியாங்குளம்
 2. தா்மபுரம்
 3. இராஜாக்கமங்கலம்
 4. இராமபுரம்
 5. தேரேகால்புதூா்
 6. பீமநகரி
 7. திருப்பதிசாரம்
 8. அத்திகாட்டுவிளை
 9. எள்ளுவிளை
 10. மேல கிருஷ்ணன்புதூா்
 11. பள்ளம்துறை
 12. பறக்கை
 13. கேசவன் புத்தன்துறை
 14. புத்தேரி
 15. மணக்குடி

i,  பெருந் திட்டம் I

இப்பெரும் திட்டமானது முதலில் அரசு ஆணை எண் 366, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை, நாள் 11.04.1985, பிரிவு 24-ன் கீழ் இசைவு பெற்று பின்னா் அரசு ஆணை எண் 198 வீ்ட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை, நாள் 14.02.1991 பிரிவு 28-ன் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  மேலும் அத்திட்டம் ஆய்வு செய்யப்பட்டு அரசு ஆணை எண் 289, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை, நாள் 12.07.1999, பிரிவு 32-ன் கீழ் இசைவு பெறப்பட்டு, அரசு ஆணை எண் 218, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை, நாள் 14.10.2008-ன் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

ii. விரிவான அபிவிருத்தி திட்டம்   (PDF 96.5KB) 

சட்டம் & விதிகள்

அங்கீகரிக்கப்படாத மனைகள் நிரந்தரப்படுத்த

விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்

அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் நிரந்தரப்படுத்த

விண்ணப்பிக்கஇங்கே சொடுக்கவும்