மூடுக

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

கூட்டுறவு , உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் பற்றிய விவரங்கள்

கன்னியாகுமரி மண்டல, மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சென்னை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இணைப்பதிவாளர் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாக இணைப்பு கட்டிடத்தில் 2-வது மாடியில் செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் அலுவலகம் நாகர்கோவில் மற்றும் தக்கலை-ல் செயல்பட்டு வருகிறது. துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்), நாகர்கோவில் அலுவலகம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாக இணைப்பு கட்டிதத்தில் 2-வது மாடியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

II. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் சங்கங்களின் விவரங்கள்

 
வ.எண் நாகர்கோவில் சரகம் நாகர்கோவில் சரகம் தக்கலை சரகம் மொத்தம்
1 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 1 1
2 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை
3 மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் 1 1
4 மாவட்ட கூட்டுறவு அச்சகம் 1 1
5 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 2 3 5
6 நகர கூட்டுறவு வங்கி 1 1
7 நகர கூட்டுறவு கடன் சங்கம் 2 1 3
8 வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் 1 2 3
9 பல்நோக்கு கூட்டுறவு சங்கம் 1 1
10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 34 81 115
11 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் 25 15 40
12 பிரதம கூட்டுறவு பண்டகசாலை 1 9 10
13 பணியாளர் கூட்டுறவு பண்டகசாலை 1 1 2
14 தொழில் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் 2 2 4
15 சொட்டு நீர் பாசன கூட்டுறவு சங்கம்
16 மாணவர் கூட்டுறவு பண்டகசாலை 7 3 10
17 மொத்தம் 79 118 197

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் விவரம்

  1. பயிர் கடன்
  2. நகை அடமானக் கடன்
  3. விவசாய கூட்டுபொறுப்பு குழு கடன்
  4. மத்தியக் கால கடன் (தனி நபர் ஜாமீன்)
  5. அடமானத்தின் பேரில் மத்தியக் கால கடன் (சிறிய அளவில் கறவைமாடு கடன் (1+5) கோழி, டிராக்டர்
  6. சிறிய நீர்பாசனக் கடன் – ஆழ்குழாய் கிணறு, மோட்டார், சொட்டு நீர் பாசனம், ஆழ்குழாய் கிணற்றின் சுற்றுசுவர்
  7. மாற்றுத்திறனாளி கடன்
  8. சேமிப்பு அடிப்படையிலான சுய உதவிக்குழு கடன்
  9. டாப்செட்கோ கடன் (பின்தங்கிய வகுப்பு)
  10. டாம்கோ கடன் (சிறுபான்மையினர்)

நகர கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன்கள் விவரம்

  1. நகைக்கடன்
  2. சிறுதொழில் கடன்
  3. சுயஉதவிக் குழு கடன்
  4. பண்ணைசாராக் கடன்
  5. வீடு கட்டுமான கடன்
  6. வீட்டு அடமானக் கடன்
  7. பெண்களுக்கான தொழில் கடன்
  8. உழைக்கும் பெண்களுக்கான கடன்
  9. மகப்பேறு கடன்
  10. டாம்கோ
  11. டாப்செட்கோ
  12. மாற்றுத்திறனாளி கடன்

பொது விநியோகத் திட்டம்

கன்னியாகுமரி மாவட்ட பொது விநியோகத் திட்டம் தமிழ்நாடு பாதுகாப்பு விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது. இந்ந விதியின் நோக்கம் அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, ஆயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குவது ஆகும்.

பொது விநியோகத் திட்டத்தின் நோக்கம்:

ஏழை மற்றும் வறுமைக்கோட்டிற்கு (பிபிஎல்) கீழ் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய விலை போன்றவற்றை பாதுகாப்பதற்காக.

ஏழைகளுக்கும் குறிப்பாக மலைவாழ் மக்களுக்கும் அத்தியாவசிய பண்டங்களை வழங்குதவன் மூலம் உடல் கட்டமைப்பில் குறைபாடு குறைக்கப்படலாம்.

பருப்பு மற்றும் எண்ணெய் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படுகின்றன.

மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு சிலிண்டர் மானிய விகிதத்தில் வழங்கப்படும்

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் நியாகவிலைக் கடையை அணுகி அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய பொருட்கள் சரியான நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்

கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இணையதளம் மூலம் ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கான விண்ணப்பம் தாலுகா வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு நியாயவிலைக் கடை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

நுகர்வோர் பாதுகாப்பு

நுகர்வோர் பிரச்சினைகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் தீர்க்கப்பட முடியும். சட்ட விரோத வர்த்தகம் மற்றும் பொருட்களின் பாதுகாப்பு, தரம் ஆகியவை நுகர்வோர் நீதிமன்றம் மூலம் தீர்க்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பு மூலம் விழிப்புணர்பு நிகழ்ச்சிகளை நடத்தி கல்லூரி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.