மூடுக

சமூக பாதுகாப்புத்திட்டம்

முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை
வ.எண் திட்டத்தின் பெயர் உதவித்தொகை தகுதிகள்
1 இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை 1000
  1. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், உழைக்கும் திறனற்றவராக இருக்க வேண்டும்
  2. ஆதரவற்றோர்
  3. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்
  4. ரூ. 50000/-மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது.
2 இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை 1000
  1. விதவையாக இருக்க வேண்டும்
  2. 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  3. ஆதரவற்றோர்
  4. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்
  5. ரூ. 50000/-மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது
3 இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை. 1000
  1. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  2. ஆதரவற்றோர்
  3. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்
  4. ஊனத்தின் தன்மை 80 சதவீதத்திற்கும் மேலாக இருக்க வேண்டும்.
  5. எவரிடத்திலும் பிச்சையெடுப்பராக இருக்கக் கூடாது
  6. ரூ. 50000/– மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது
4 ஆதரவற்ற விதவை உதவித் தொகை 1000
  1. ஆதரவற்றோர்
  2. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  3. ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது.
5 ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை 1000
  1. ஆதரவற்றோர்
  2. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் (மிகவும் வறுமை நிலையில் 18 வயதிற்கு கீஉள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குழுவால் வயது வரம்பு தளர்வு செய்யப்டுகிறது)
  3. ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது
6 ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்டவருக்கான உதவித் தொகை 1000
  1. ஆதரவற்றோர்
  2. 30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  3. கணவனால் கைவிடப்பட்டு உரிய நீதிமன்றத்தில் சட்டரீதியாக விவாகரத்து பெற்றவராக அல்லது 5 வருடங்களுக்கு மேல் கணவரால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்.
  4. ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது.
  5. எவரிடத்திலும் பிச்சையெடுப்பராக இருக்கக் கூடாது
7 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளாத ஏழை பெண்களுக்கான உதவித் தொகை 1000
  1. ஆதரவற்றோர்
  2. 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  3. திருமணம் செய்து கொள்ளாதவராக இருக்க வேண்டும்
  4. ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்கள் இருக்கக் கூடாது.
  5. ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது.
8 இலங்கை அகதிகள் – கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை 1000
  1. ஆதரவற்றோர்
  2. 30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  3. கணவனால் கைவிடப்பட்டு உரிய நீதிமன்றத்தில் சட்டரீதியாக விவாகரத்து பெற்றவராக அல்லது 5 வருடங்களுக்கு மேல் கணவரால்; கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்
  4. ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது.
  5. இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.
9 இலங்கை அகதிகள் – விதவை உதவித் தொகை 1000
  1. ஆதரவற்றோர்
  2. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  3. விதவையாக இருக்க வேண்டும்.( 18 வயதிற்குமேல் மகன் இருந்தால் தகுதியில்லை)
  4. இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.
  5. ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது.
10 இலங்கை அகதிகள் – முதியோர் உதவித் தொகை 1000
  1. ஆதரவற்றோர்
  2. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  3. ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது.
  4. இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்
11 இலங்கை அகதிகள் – மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை 1000
  1. ஆதரவற்றோர்
  2. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
  3. ஊனத்தின் தன்மை 40 சதவீதத்திற்கும் மேல் இருக்க வேண்டும்
  4. இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்
நலிந்தோர் நல்வாழ்வு நலத்திட்டம்
வ.எண் திட்டத்தின் பெயர் உதவித்தொகை தகுதிகள்
1 தமிழ்நாடு விபத்து நிவாரணத்திட்டம் 20000
  1. விபத்தில் இறந்தவர்க்கு வழங்கப்படுகிறது.
  2. விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள்(2.05 ஏக்கர் நிலமுடைய சிறு மற்றும் குறு விவசாயிகள்)
  3. முதல் தகவல் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
2 முதலமைச்சரின் நலிந்தோர் நல்வாழ்வுத் நலத்திட்டம் 20000
  1. வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத்தலைவர் இறந்து விட்டால் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படும்
  2. குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள்
  3. விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள்(2.05 ஏக்கர் நிலமுடைய சிறு மற்றும் குறு விவசாயிகள்)
  4. வருட வருமானம் ரூ.24,000/-
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம்-2011
வ.எண் திட்டத்தின் பெயர் உதவித்தொகை தகுதிகள்
1 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம்கீழ் முதியோர் உதவித் தொகை (பொது) 1000
  1. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், உழைக்கும் திறனற்றவராக இருக்க வேண்டும்.
  2. ஆதரவற்றோர்
  3. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் – 2011-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்
  4. ரூ. 50000/- மதிப்பிற்கு மேற்பட்ட சொத்துக்களோ, ஜீவனம் செய்வதற்காக எவ்வித வருமானம் அல்லது வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரன்களின் (மகனின் மகன்) ஆதரவோ இருக்கக் கூடாது
2 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகை தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில்நுட்ப பயிற்சி கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு
  1. இத்திட்டத்தின் கீழ் பதிவுபெற்ற உறுப்பினா; ஒருவாpன் குழந்தைகளின் கல்விக்காக ஆண்டொன்றுக்கு கீழ்கண்டவாறு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  2. கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
  3. கல்வியாண்டு துவங்கிய ஆற மாத காலத்திறகுள் விண்ணப்பக்கவேண்டும்.
3 முதலமைச்சரின் உழவர; பாதுகாப்புத்திட்டம் கீழ் உறுப்பினருக்கானஃ உறுப்பினரைச் சார்ந்தவருக்கான திருமண உதவி தொகை பெண் – Rs. 10,000/-
ஆண் – Rs. 8,000/-
  1. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் – 2011-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  2. முதல் திருமணத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
  3. உறுப்பினர் / உறுப்பினரைச் சார்ந்தவரின் அனைத்து குழந்தைகளும் தகுதியானவர்
  4. திருமணம் மடிவதற்கு முன்பு 3 மாதம் அல்லுது திருமணம் மடிந்த பின்பு 6 மாத காலத்திற்குள் விண்ணப்பக்க வேண்டும்.
4 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம்-இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை இறப்பு-Rs.20,000/-
ஈமச்சடங்கு-Rs. 2,500/-
  1. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் – 2011-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  2. மரூன் நிற அட்டை பெற்ற உறுப்பினர் இறந்தால் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  3. இறப்புச்சான்றுடன் மரணம் ஏற்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
5 உழவர் பாதுகாப்புத்திட்டம்-விபத்திற்கான உதவித்தொகை இறப்பு-Rs.1,00,000/-
ஈமச்சடங்கு-Rs. 2,500/-
  1. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் – 2011-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  2. இத்திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அவரைச்(பதிவுபெற்ற உறுப்பினர்) சார்ந்தவருக்கு வழங்கப்படும்.
6 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம்- தற்காலிக உடல்திறன் குன்றியோருக்கான உதவித் தொகை 1000
  1. வயது 18 முதல் 65 வரை இருக்க வேண்டும்.
  2. தற்காலிக உடல் திறனற்ற காலம வரை உதவி தொகை நீட்டிக்கப்படும்.
  3. புற்றுநோய், காசநோய், HIV, சிறுநீரக நோய் மற்றும் அதர கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்வர்கள்.
  4. அரசு மருத்துவரினால் வழங்கப்பட்ட சான்று தேவை.