மூடுக

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ,கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் மொத்த பரப்பு 65,804 எக்டர் ஆகும். மொத்த தோட்டக்கலைப் பயிர் பரப்பில் 84% மலைப்பயிர்களும் 10% பழப்பயிர்களும் 3% வாசனை திரவிய பயிர்களும் 1% காய்கறி பயிர்களும் 0.2% மலர் பயிர்களும் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் பயிரானது 28,060 எக்டர், தென்னை 24,573 எக்டர், முந்திரி 966 எக்டர், புளி 867 எக்டர், பனை 882 எக்டர், கிராம்பு 780 எக்டர், பலா 606 எக்டர், நல்லமிளகு 292 எக்டர், தேயிலை 213 எக்டர், அன்னாசி 105 எக்டர் பரப்பில் முக்கிய தோட்டக்கலைப் பயிர்களாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மலைப்பயிர் முக்கிய பயிராக திருவட்டார், மேல்புறம் வட்டராங்களிலும் பழப்பயிர்கள் முக்கிய பயிராக தக்கலை, தோவாளை மற்றும் குருந்தன்கோடு வட்டாரங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பெருமக்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றை பெருக்குவதற்காகவே தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்:

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம்

பயிர்பரப்பு விரிவாக்கம்

உயர்ரக காய்கறி விதைகள் மற்றும் குழித்தட்டு நாற்றுகளுக்கு (கத்தரி, வெண்டை, மிளகாய்) எக்டருக்கு ரூ.20,000/- மானியமாகவும்

பயிர் ஊக்கதொகை – காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.2,500/- ஊக்கதெகையாகவும் வழங்கப்படுகிறது.

முருங்கைபரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் முருங்கை நாற்றுகள் எக்டருக்கு ரூ.10,000/- மானியமாகவும், பல்லாண்டு வாசனை திரவியப்பயிர் சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.20,000/- மானியமாகவும், கோகோ சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு ரூ.12,000/- மானியமாகவும், முந்திரி பயிருக்கு ஒரு எக்டருக்கு ரூ.12,000/- மானியமாகவும் வழங்கப்படுகிறது.

தனி நபருக்கான நீர் சேமிப்பு அமைப்பு உருவாக்குதல்

நீராதாரத்தை பெருக்கும் பொருட்டு 50% மானியத்தில் 20x20x3மீ அளவுள்ள குளம் /ஆழ்துளைக்கிணறு /கிணறு அமைப்பதற்கு ஒரு க.மீ – க்கு ரூ.125/- வீதம்   50% மானியமாக ரூ.75,000/- எண்ணத்திற்கு வழங்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை / ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

எக்டருக்கு ரூ.1,200/- மானியமாகவும்,

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் பொருட்டு எக்டருக்கு ரூ.4,000/-மானியமாகவும் வழங்கப்பட உள்ளது.

தேனீ வளர்ப்பு மூலம் மகரந்த சேர்க்கை ஊக்குவித்தல்

தேன் கூடு மற்றும் தேனீ வளர்ப்பு பெட்டி ஒரு எண்ணிற்கு  ரூ. 1,600/- ம், தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ஒரு எண்ணிற்கு ரூ.8,000/- ம் 40% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இயந்திரமயமாக்குதல்

இயந்திரமயமாக்குதல் இனத்தின் கீழ் விசை உழுவை வாங்குவதற்கு ரூ.60,000/- மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை

சிப்பம் கட்டும் அறை 9மீx6மீ என்ற அளவில் கட்டுவதற்கு 50% மானியமாக ரூ.2.00 இலட்சம் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்:

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கீரை பயிருக்கு எக்ட்டருக்கு ரூ.2,500/-, தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறி பயிருக்கு எக்ட்டருக்கு ரூ.3,750/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அங்ககசான்று கட்டணமாக நபருக்கு ரூ.500/- வழங்கப்படும்.  வாழை பயிருக்கு முட்டு கொடுப்பதற்கு எக்ட்டருக்கு 50% மானியமாக ரூ.25,000/-  வழங்கப்படும். மேலும் இதன் துணை திட்டம், முந்திரி பயிர் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் எக்டருக்கு ரூ.12,000/- மானியமாக வழங்கப்படும்.

பிரதம மந்திரியின் நுண்ணீர்ப்பாசன திட்டம்:

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் பொருட்டு விவசாய பெருமக்கள் நுண்ணீர்ப்பாசனம் செய்வதற்கு சிறு/குறு விவசாயியாக இருப்பின் 100% மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 எக்டர் வரை நுண்ணீர்ப்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும், ஒரு விவசாயி ஏற்கனவே நுண்ணீர்ப்பாசனம் அமைக்க மானியம் பெற்றிருப்பின் 7ஆண்டுகளுக்கு பிறகே அந்த நிலத்திற்கு மானியம் பெற தகுதியாவார்.

துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள்:

தங்கள் வயலில் நுண்ணீர்ப்பாசன அமைப்பினை நிறுவ ஏதுவான செயல்பாடுகள் அனைத்தையுமோ அல்லது தேவையான இனங்களை மட்டுமோ பயனாளிகள் தங்கள் சொந்த செலவில் முதலில் மேற்கொள்ள வேண்டும். பின்பு உதவித்தொகை பின்னேற்பு மானியமாக (back ended subsidy) வழங்கப்படும். குழாய்க்கிணறு/துளைக்கிணறு அலகு ஒன்றிற்கு செலவிடப்பட்ட தொகையில் 50% அல்லது ரூ.25,000/-த்திற்கு மிகாமல், டீசல் பம்புசெட்/மின்மோட்டார் பம்புசெட் ஒன்றின் விலையில் 50% அல்லது ரூ.15,000/-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பாசனக்குழாய் அமைக்க, குழாய்கள் விலையில் 50% அல்லது எக்டருக்கு ரூ.10,000/- க்கு மிகாமல்,  தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கான செலவில் 50% அல்லது ஒரு கன மீட்டருக்கு ரூ.350/- க்கு மிகாமல் நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000/- க்கு மேற்படாமல் வரையறுக்கப்பட்டுள்ளது.

நீடித்த நிலையான வேளண்மைக்கான தேசிய இயக்கம்:

மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டம்:

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம்

1.தோட்டக்கலை சார்ந்த பண்ணையம்: முதன்மைப் பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடிக்கு மானியமாக எக்டருக்கு ரூ.9,200/-.

நிரந்தர மண்புழு உரக்கூடம் அமைக்க அலகு ஒன்றுக்கு ரூ.12,500/- மானியமாகவும்,

தேனீ வளர்ப்பிற்கு 8 அலகிற்கு ரூ.12,800/-  மானியமாகவும்,

நாட்டுமாடு வாங்குவதற்கு ஒரு எண்ணத்திற்கு ரூ.15,000/- மானியமாகவும், ஆடு வாங்குவதற்கு ரூ.1,500/- எண்ணம் (4+1 எண்) மானியமாகவும், நாட்டுக்கோழி 10 எண்ணம் வாங்குவதற்கு ரூ.3,000/- மானியமாகவும் வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்

பயிர் பரப்பு விரிவாக்கம்

மானாவரி தோட்டக்கலை பயிர்களுக்கு (நாவல், நெல்லி, புளி) எக்டருக்கு ரூ. 20,000/- மானியமாகவும், பாரம்பரிய காய்கறி மற்றும் பழப்பயிர் ரகங்களுக்கு 50% மானியமாக எக்டருக்கு ரூ.15,000/-, சிறுபான்மை பழப்பயிர்களுக்கு 50% மானியமாக எக்டருக்கு ரூ.30,000/- வழங்கப்படும்.

வீட்டு காய்கறி தோட்டத்தை மேம்படுத்துதல்:

காய்கறி விதை தளை ஒன்றிற்கு ரூ.10/- மானியமாகவும், காய்கறி தோட்ட தளை ஒன்றிற்கு ரூ.340/- மானியமாகவும், வீட்டு தோட்டத்திற்கு சொட்டுநீர் பாசனம் (சென்சார் இல்லாமல்) அமைப்பு ஒன்றிற்கு ரூ.320/- மானியமாகவும் வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம்

பிளாஸ்டிக் கூடை 10 எண்ணத்திற்கு ரூ.3,750/- மானியமாகவும், அறுவடைக்கு பயன்படும் அலுமினிய ஏணி வாங்க ஒரு எண்ணிற்கு ரூ.10,000/- மானியமாகவும்,  பழங்களை பாதுகாப்பாக பறிப்பதற்கான வலை ஒரு எண்ணிற்கு ரூ.250/- மானியமாகவும் வழங்கப்படுகிறது. மலர்கள் பறிப்பதற்கு உதவும் தலையில் மாட்டும் ஒளிவிளக்கு வாங்க எண்ணத்திற்கு ரூ. 250/- மானியமாகவும், கவாத்து செய்ய பயன்படும் கத்தரி வாங்க எண்ணத்திற்கு ரூ.200/- மானியமாக வழங்கப்படும்.

கூட்டுப்பண்ணைத் திட்டம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2017 – 18 ம் நிதியாண்டிலிருந்து கூட்டுப்பண்ணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு/குறு விவசாயிகளைக் கொண்டு உழவர் ஆர்லர் குழு உருவாக்கப்பட்டு பின் 5 உழவர் ஆர்வலர் குழு இணைந்து உழவர் உற்பத்தியாளர் குழு 7 – 10 அல்லது அதற்கு மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்படும். கூட்டு சாகுபடி செய்வதை ஊக்குவித்தல் மற்றும் புதிய தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கிறது.

தோட்டக்கலை பயிர்களின் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி முதலிய அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்கள் மாண்புமிகு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அடங்கும். இயற்கை பேரிடர்களினால் ஏற்படும் பயிர்சேதம் மற்றும் மகசூல் இழப்பை ஈடு செய்ய விவவாயிகள் அறிவிப்பு செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் காப்பீடு செய்தால் காப்பீட்டுத் தொகை பெறலாம்.

அரசு தோட்டக்கலைப் பண்ணை கன்னியாகுமரி:

அரசு தோட்டக்கலைப் பண்ணை கன்னியாகுமரி 1922ம் ஆண்டு 31.64 ஏக்கர் பரப்பில் நிறுவப்பட்டது.

அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் தோட்டக்கலை தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்கும் நோக்கத்துட.ன் பண்ணை சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது. திருமணங்கள், விழாக்கள் மற்றும் விஷேசங்களில் தற்போது மரக்கன்றுகள் மற்றும் பழச்செடிகள் வழங்குவது மிகவும் பிரபலமாக உள்ளதனால், தரமான பழச்செடிகள், மலர்வகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

உயிரி கட்டுப்பாட்டு உற்பத்தி கூடத்தில் டிரைக்கோ டெர்மா விரிடி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சாக்லேட் உற்பத்தி கூடம்:

அரசு தோட்டக்கலைப் பண்ணை கன்னியாகுமரி மாவட்டம் சாக்லேட் உற்பத்தி கூடம் ரூ. 3.5 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்பட்டுள்ளது.

சூரிய ஒளித் தகடு:

சூரிய ஒளித் தகடு ரூ.4.95 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்பட்டுள்ளது.

டான்ஹோடா விற்பனை நிலையம்:

அரசு தோட்டக்கலை பண்ணையில் கிடைக்கும் விளைப்பொருட்கள் பழங்கள், காய்கறிகள் பூக்கள், நறுமணப் பொருட்கள் மலைப்பயிர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களான ஜாம், ஜெல்லி, ஸ்குவாஷ், ஊறுகாய் போன்ற பொருட்கள் பண்ணை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டான்ஹோடா விற்பனை மையத்தின் மூலம் தரமான உற்பத்தி பொருட்கள் மட்டுமல்லாமல் மற்ற விவசாய இடு பொருட்களான, பண்ணைக் கருவிகள், விதைகள், நறுமணப் பொருட்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் உற்பத்தியாளர் பொருட்கள்/ உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பொருட்கள் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய டான்ஹோடா விற்பனை மையம் வழிவகுக்கிறது.

விதைப்பந்து:

பசுமை போர்வை மூலம் இயற்கை சூழலை மேம்படுத்துவதிலும், புவி வெப்ப மயமாதலை குறைக்கும் நோக்கத்தோடு மரங்கள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பந்துகள் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

 பண்ணை சுற்றுலா:

அரசு தோட்டக்கலை பண்ணையில் பழங்கள், அதன் உபபொருட்களான பழக்கூழ், ஊறுகாய் முதலியன டான்ஹோடா விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் டான்ஹோடா விற்பனை நிலையமானது உற்பத்தி பொருளின் தரத்தை உறுதிபடுத்துகிறது. இது உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொருட்களை நியாயமான விலையில் இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து கொடுக்கும் அமைப்பாக விளங்குகிறது.

அரசு தோட்டக்கலைப் பண்ணை பேச்சிப்பாறை:

அரசு தோட்டக்கலைப் பண்ணை பேச்சிப்பாறை 1967 ம் ஆண்டு 15 ஏக்கர் பரப்பில் நிறுவப்பட்டது.

தேனீ மகத்துவ மையம் ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்லாண்டு வாசனைத் திரவிய பயிர்களான நல்லமிளகு, கிராம்பு ஜாதிக்காய் முதலிய நடவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

பயனாளிகள் தகுதி

சொந்த நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகள்

குத்தகை நிலமாக இருப்பின் திட்ட வகையான இனங்களுக்கு பத்து வருட குத்தகை ஒப்பந்தம் செய்து இருக்க வேண்டும்

பயிர்பரப்பு விரிவாக்கம் மற்றும் பாதுகாக்கப்பட்ட சாகுபடி செய்பவர்களுக்கு நீர்ப்பாசன வசதி கட்டாயமாக இருக்க வேண்டும்

விண்ணப்பப் படிவத்துடன் அனைத்து நில உடைமை ஆவணங்களுடன் சமர்ப்பித்தல்

சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் நடப்பு ஆண்டிற்கு செல்லுபடியாகும் ஆவணமாக இருத்தல் வேண்டும்

 

 சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  1. 1. விண்ணப்ப படிவம்
  2. 2. Hortinet-ல் பதிவு செய்திருத்தல்
  3. 3. சிட்டா மற்றும் அடங்கல்
  4. 4. நில வரைபடம்
  5. 5. ஆதார் அட்டை
  6. பாஸ்போர்ட் சைஸ் போட்டா
  7. ரேஷன்கார்டு ஜெராக்ஸ்
  8. வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல்
  9. மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை
  10. திட்ட அறிக்கை

தோட்டக்கலை அலுவலர்களின் தொடா்பு விவரங்கள்:

வ.எண்

பதவி

வட்டாரம்

தொலைபேசி எண்

1 தோட்டக்கலை துணை இயக்குநர் கன்னியாகுமரி 9994223496
2 தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருட்கள்) கன்னியாகுமரி 9944356995
3 தோட்டக்கலை அலுவலர்
(தொழில்நுட்பம்)
கன்னியாகுமரி 9944141693
4 தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொறுப்பு) அகஸ்தீஸ்வரம் 9629597336
5 தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொறுப்பு) ராஜாக்கமங்கலம் 9629597336
6 தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொறுப்பு) தோவாளை 9500997715
7 தோட்டக்கலை உதவி இயக்குநர் குருந்தன்கோடு 9629597336
8 தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொறுப்பு) தக்கலை 9489900407
9 தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொறுப்பு) திருவட்டார் 9500997715
10 தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொறுப்பு) மேல்புறம் 9500997715
11 தோட்டக்கலை உதவி இயக்குநர் முஞ்சிறை 9500997715
12 தோட்டக்கலை உதவி இயக்குநர் கிள்ளியூர் 9442060055
13 தோட்டக்கலை அலுவலர் திருவட்டார் 9489900407
14 தோட்டக்கலை அலுவலர் (பொறுப்பு) தக்கலை 9489900407
15 தோட்டக்கலை அலுவலர் (பொறுப்பு) குருந்தன்கோடு 9489900407
16 துணை தோட்டக்கலை அலுவலர் மேல்புறம் 9443580495
17 துணை தோட்டக்கலை அலுவலர் (பொறுப்பு) கிள்ளியூர் 9443580495
18 துணை தோட்டக்கலை அலுவலர் (பொறுப்பு) முஞ்சிறை 9443580495