திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை
📖 விளக்கம்: திருவள்ளுவர் என்னும் தமிழ் புலவரின் 133 அடி உயர சிலை முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் கடலின் உள்ளே விவேகானந்தர் மண்டபம் இருக்கும் பாறைக்கு அருகே உள்ள பாறையில் அமைந்துள்ளது. 95 அடி உயர திருவள்ளுவர் சிலை திருக்குறளின் 38 அதிகாரங்களைக் கொண்ட நல்லொழுக்கம் என்னும் பாடல் தொகுப்பை குறிக்கும் வகையில் 38 அடி உயர பீடத்தில் அமைந்துள்ளது. நல்லொழுக்கமே மனிதனின் செல்வ செழிப்பிற்கும் இன்பத்திற்கும் மூலகாரணம் என்பதை விளக்கும் வகையில் இந்த 133 அதிகாரங்களைக் குறிக்கும 133 அடி உயர பீடம் மற்றும் சிலை திகழ்கிறது. 7000 டன் எடைக் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலை இடுப்பு பகுதியில் ஒரு சிறிய வளைவுடன் காணப்படுகிறது. இதை வடிவமைத்தவர் டாக்டர் வி. கணபதி ஸ்தபதி. இந்த மூன்று அடுக்கு ஆதார பீடத்தை சுற்றி கலை வேலைப்பாடு மிக்க 38 அடி உயரம் உள்ள அலங்கார மண்டபம் உள்ளது. இந்த அலங்கார மண்டபத்தை சுற்றி 10 யானைகள் 8 திசைகளை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை ஜனவரி 1, 2000ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
🕒 நேரம்: 8:00 a.m. to 4:00 p.m.
📞 அவசர தொடர்பு எண்கள்
- காவல்: 100
- தீயணைப்பு: 101
- ஆம்புலன்ஸ்: 108
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
- உள்ளாட்சி நிர்வாகம்: கன்னியாகுமரி நகராட்சி (04652-246279)
- சுற்றுலா துறை: 9176995866
📍 வழியைப் பெறுங்கள்:
🚌 பேருந்து விவரங்கள்
Bus Terminal | Route No. | Via |
---|---|---|
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் | 1,2,303 | அண்ணா பேருந்து நிலையம், கோட்டார், சுசீந்திரம், கொட்டாரம் |
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் | 1,2,303 | சுசீந்திரம், கொட்டாரம் |
கன்னியாகுமரி பேருந்து நிலையம் | ||
மார்த்தாண்டம் பேருந்து நிலையம் | 303 | தக்கலை, நாகர்கோவில் |
களியக்காவிளை பேருந்து நிலையம் | 303 | தக்கலை, நாகர்கோவில் |
📷 பட தொகுப்பு

