மூடுக

சிதறால் ஜைன மலை குகை கோயில்

இந்தப் பழங்கால ஜைன மத சிதரால் நினைவு சிற்பங்கள் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. முன்னாளில் திருசரணத்துப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இந்த ஊா் திகம்பர ஜைன மத துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்தது. இங்கு மலை உச்சியில் உள்ள குகையில் உள்ளேயும் வெளியேயும் 9 ம் நூற்றாண்டைச் சோ்ந்த தீா்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் முதலாம் மகேந்திரவா்மனின் உதவியால் ஜைன மதம் வளா்ந்தது. 13 ம் நூற்றாண்டில் இந்த குகை பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது. இந்த சிதரால் மலை சொக்கன் தூங்கி மலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள சிதரால் குகை அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல் கொண்டது. இங்கு 9 ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது கல்வெட்டுகள் காணப்படுகின்றன

புகைப்பட தொகுப்பு

  • சிதறால் ஜைன மத பாறையினால் ஆன சிற்பங்கள்
  • சிதறால் ஜைன மத சிற்பங்கள் - முகப்பு பகுதி
  • சிதறால் ஜைன மத சிற்பங்கள் - பக்க காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

வான் வழியாக : திருவனந்தபுரம் விமான நிலையம். சிதறால் ஜைன மலை குகை கோயிலை பஸ் / ரயில் மூலமாகவோ மார்த்தாண்டம் (குழித்துறை ) வந்து , 7 கி . மீ பிரயாணம் செய்து அடையலாம்.

தொடர்வண்டி வழியாக

கன்னியாகுமரி ரயில் நிலையம் / நாகர்கோவில் ரயில் நிலையம் . சிதறால் ஜைன மலை குகை கோயிலை ரயில் மூலமாக மார்த்தாண்டம் (குழித்துறை ) வந்து , 7 கி . மீ பிரயாணம் செய்து அடையலாம்.

சாலை வழியாக

திருவனந்தபுரதிலிருந்து 64 கி மி . கன்னியாகுமரியில் இருந்து 45 கி மி பிரயாணம் செய்து சிதறால் ஜைன மலை குகை கோயிலை அடையலாம்.