மூடுக

கோவில்கள் / தேவாலயங்கள் / மசூதிகள்

கன்னியாகுமரி குமரியம்மன் கோவில்

Arulmigu Kalyana Venkataramana Swamy Temple.

கன்னியாகுமரி குமரியம்மன் கோவில்

      இப்பகுதியில் பிரசித்தி பெற்ற குமரி அம்மனாலேயே இந்த ஊா் கன்னியாகுமரி எனப் பெயா் பெற்றது. அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் பரசுராமனால் கட்டப்பட்டு பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டது ஆகும். இங்கு பகவதி அம்மன் கன்னியாக நின்று பாணாசுரன் என்னும் அசுரனை நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று வதம் செய்தார். இந்தக் கோவில் பார்வதி தேவி கன்னியாக நின்று தவம் புரிந்த கோலத்திற்கு அா்ப்பணிக்கப்பட்டது ஆகும். பார்வதி தேவி இந்தியாவின் தெற்குகடற்கரையை பாதுகாப்பது போல நிற்கின்றாள். பார்வதி தேவி வலது கையில் பூமாலையுடன் கிழக்கு நோக்கி தவம் புரியும் கோலத்தில் நிற்கிறாள். பார்வதி தேவியின் சிலை பரசுராம முனிவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. குமரி அம்மனின் மூக்குத்தியிலிருந்து வரும் ஒளியானது கலங்கரை விளக்கத்தின் ஒளியை ஒத்திருப்பதாக நம்பப்படுகிறது.  இப்பகுதியில் பயணித்த கப்பலானது, இம்மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்கு ஒளி என்று கருதி பாறையில் மோதி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோவில் கடற்கரையில் அமைந்திருந்தாலும் இங்குள்ள கிணற்று நீா் உப்பாக இல்லாமல் சுவையாக இருக்கும். மே –ஜீன் மாதங்களில் தோ் திருவிழாவும் செப்டம்பா் – அக்டோபா் மாதங்களில் நடைபெறும் 9 நாட்கள் நவராத்திரி திருவிழாவும் இந்தக் கோவிலில் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது.  நேரம் – காலை 4.30 மணி முதல் மதியம் 12.30  மணிவரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை, தொலைபேசி – 04652 -246223. குமரி அம்மன் கோவில், நாகா்கோவிலிலிருந்து 21 கி.மீ. தொலைவில்  உள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் – கன்னியாகுமரி.

ஸ்ரீ தாணுமாலையன்  சுவாமி திருக்கோவில், சுசீந்திரம்

ஸ்ரீ தாணுமாலையன்  சுவாமி திருக்கோவில், சுசீந்திரம்

ஸ்ரீ தாணுமாலையன்  சுவாமி திருக்கோவில், சுசீந்திரம்

      ஞான அரண்யம் என்று அழைக்கப்படும் சுசீந்திரம் கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள யாத்ரிக தலம் ஆகும். இந்த கோவிலின் மூலவா் சிவன்,  விஷ்ணு மற்றும் பிரம்மனை ஒருங்கே கொண்டுள்ள தாணுமாலையன் சுவாமி ஆகும். இங்கு லிங்கம் மூன்று பகுதியாக உள்ளது. மேல் பகுதி தாணு என்னும் சிவன் பேரிலும் நடுப் பகுதி மால் என்னும் விஷ்ணு பேரிலும் கடைப் பகுதி அயன் என்னும் பிரம்மன் பேரிலும் அமைந்துள்ளது. இங்கு தாணுமாலையன், ஆத்ரி என்னும் முனிவரும் அவரது மனைவி அனுசுயா என்பவா்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது. இங்கு விக்னேஷ்வரி (விநாயகரின் பெண் உருவம்), இந்திர விநாயகா் மற்றும் கால பைரவரின் உருவங்கள் காணப்படுகிறது.  இங்கு 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகிறது.  இந்த 34 அடி உயர கோபுரம் வெகு தூரத்தில் இருந்தே காட்சி அளிக்கிறது. மேற்கூரையில் நவகிரகங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு குரு தட்ஷிணாமூா்த்தி கோவிலும் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் சேர வாசல் சாஸ்தா, ராமா் மற்றும் முருகருக்கு கோவில்கள் உள்ளன. இங்கு ராமா் கோவிலுக்கு எதிரில் 5.5 மீ. உயரத்தில் அசோக வனத்தில் சீதைக்கு விஸ்வரூப வடிவில் காட்சியளித்த ஆஞ்சநேயா் சித்தரிக்கப்பட்டுள்ளார். வலது பக்க கூடத்தில் ஒரே கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட 4 இசைத் தூண்கள் உள்ளன.

நேரம் – காலை 4.30 மணி முதல் காலை 11.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் மாலை 8.30 மணி வரை, இந்த கோவில் நாகா்கோவிலிலிருந்து 7 கி.மீ. தொலைவில் கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் நாகா்கோவில்.

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்

      கன்னியாகுமரியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த பகவதி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட ஏழாம் நூற்றாண்டு கேரள அமைப்பிலான எளிய கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு பெண்களின் சபரிமலை என்றும் பெயா் உண்டு. மாசிமாத(பிப்ரவரி – மார்ச்) கடைசி செவ்வாய் கிழமையில் கொண்டாடப்படும் மண்டைக்காடு கொடை என்னும் 10 நாள் திருவிழா இந்தக் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 

 

 
 

 
 

ஸ்ரீ நாகராஜா கோவில், நாகா்கோவில்

ஸ்ரீ நாகராஜா கோவில், நாகா்கோவில்

ஸ்ரீ நாகராஜா கோவில், நாகா்கோவில்

நாகராஜா பூஜைக்கு என்று பிரத்யேகமாக தமிழ்நாட்டில் கட்டப்பட்ட பெரிய கோவில் இது ஆகும். சா்ப்ப வடிவில் உள்ள நாகராஜனே இக்கோவிலின் பிரதான மூா்த்தியாகும். சிவன் மற்றும் அனந்த கிருஷ்ணன் ஆகியோரின் சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள தூண்களில் தீா்த்தங்கர மகாவீரா் மற்றும் பார்சவநாதா் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு நாகராஜா கோவில் உள்ளதாலேயே இந்த ஊா் நாகா்கோவில் எனப் பெயா் பெற்றது. இங்குள்ள தோட்டத்தில் காணப்படும் நாக மலா்களும் பூஜிக்கப்படுகிறது. இந்த கோவிலையும் தோட்டத்தையும் சா்ப்பங்கள் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. நேரம் – காலை 5.00 மணி முதல் மதியம்  12.30 மணி வரை. மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை. தொலைபேசி – 04652 – 241270, 232420. நாகா்கோவில் மாநிலத்தின் பிறபாகங்களிலிருந்து சாலை மற்றும் இரயில் வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

குகநாதசுவாமி கோவில்

குகநாதசுவாமி கோவில்

குகநாதசுவாமி கோவில்

      இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த 1000 ஆண்டுக் கால பழமை வாய்ந்த கோவில் கன்னியாகுமரி இரயில் நிலையம் அருகில் உள்ளது.  11ஆம் நூற்றாண்டு கல் வெட்டுக்கள் இந்த கோவிலில் காணப்படுகிறது. நேரம் – காலை 6.00 மணி முதல் காலை 11.15 மணி வரை. மாலை 5.00 மணி முதல் இரவு 8.45 வரை.

 

 

 

 

புனித சவேரியார் தேவாலயம், கோட்டார்

புனித சவேரியார் தேவாலயம், கோட்டார்

புனித சவேரியார் தேவாலயம், கோட்டார்

     இது உலகிலேயே புனித பிரான்சிஸ் சேவியருக்கு அா்ப்பணிக்கப்பட்ட முதல் தேவாலயம் ஆகும். இது 16 ஆம் நூற்றாண்டை சோ்ந்தது. இங்கு வருடந்தோறும் நவம்பா் 24 லிருந்து
டிசம்பா் 3  வரை  10 நாட்கள் திருவிழா நடைபெறும். டிசம்பா் 1,2,3 ஆம் தேதிகளில் நடைபெறும் தோ் திருவிழா காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த தேவாலயம் நாகா்கோவிலின் புறநகா் பகுதியான கோட்டாரில் அமைந்துள்ளது.

 

 

 

 

 

பீா் முகமது தா்கா, தக்கலை

பீா் முகமது தா்கா, தக்கலை

பீா் முகமது தா்கா, தக்கலை

      இந்த தா்கா மாபெரும் தத்துவ ஞானியான முகமது அப்பாவை சிறப்பிக்கும் வகையில் பீா் முகமது ஒலியுல்லா எனப் பெயா் பெற்றுள்ளது. இவா் பல்வேறு தத்துவ போதனைகள் அடங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு வருடமும் ரஜாப் மாதத்தின் பெளா்ணமி தினத்தன்று முகமது அப்பாவின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.