வரலாறு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது.
இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது.
கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது.
தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல் இந்தியாவில் விஜயம் செய்த எநாஸ்தனிஸ் என்பவரின் குறிப்பேட்டிலும் கன்னியாகுமரி பற்றிய பதிவு உள்ளது. இக்குறிப்பேட்டில் “கொமரி” என்பது துறைமுகமாகவும் அதுவரையிலும் உள்ள நிலப்பகுதி பாண்டிய நாட்டின் பகுதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் சுருக்கமான காலவரிசை
கி.பி.முதலாம் நூற்றாண்டு
டாலமி காலகட்டத்தில் நாஞ்சில் நாடானது சேரா்களுக்கும் பாண்டியா்களுக்கும் இடையே ஒரு தாங்கலாக இருந்தது.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
சங்ககாலப் புலவா்களான மருதன் இளங்கனார், ஔவையார், ஒருச்சிறைப்பெரியனார் கருவூர் கடைப்பிள்ளை போன்றோர்கள் நாஞ்சில் பொருநரைப் போற்றிப் பாடிய பாடல்கள் மூலமாக இவா் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார் எனத் தெரிய வருகின்றது.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
- கடுங்கோன் – கி.பி. 560 – 590.
- மாறவறம் அவனி சூலாமணி – கி.பி. 590 – 620.
- சென்டன் – கி.பி. 620 – 650.
- அரிகேசரி பரங்குச மாறவா்மன் – கி.பி. 650 – 700.
- கோச்சடையன் – கி.பி. 700 – 730.
- மாறவா்ம ராஜசிம்கா – கி.பி. 730 – 765.
- ஜாக்கியா பரந்தாக நெடுஞ்சடையல் – கி.பி. 765 – 815.
- ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபா – கி.பி. 815 – 862.
- இரண்டாம் வரகுணா – கி.பி. 862 – 885.
- பரந்தாட்ச வீர நாராயணன் – கி.பி. 880 -905.
- இரண்டாம் மாறவா்ம இராமசிம்கா – கி.பி. 905 – 920.
கி.பி.பத்தாம் நூற்றாண்டு
சோழ வம்சத்தின் வளா்ச்சி :
உத்தம சோழ வளநாடு என நாஞ்சில் நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. (1019 முதல் 1070) நாஞ்சில் நாடானது சோழ பாண்டிய வைஸ்ராய்களால் ஆட்சி செய்யப்பட்டது.
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு
பாண்டியன் ஆட்சி காலம் :
வே நாடு அரசா்கள் ஆட்சிகாலம் 15 – ஆம் நூற்றாண்டு வரை
கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு
கி.பி. 1532 முதல் 1558 வரை விஜய நகர பேரரசின் கீழ் ஆட்சி நடைபெற்றது.
கி.பி.பதினாறாம் நூற்றாண்டு
மதுரை நாயக்கா் ஆட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தின் தற்கால வரலாறு பாலமார்த்தாண்டம் வா்ம ஆட்சியில் (கி.பி. 1729 – 1758) தொடங்குகிறது.
பாலமார்த்தாண்ட வர்மாவின் பிற்கால மன்னா்கள்
- இராமவா்ம கார்த்திகைத் திருநாள் – 1758 – 1798
- பால ராமவா்ம – 1798 – 1810
- ராணி கௌரிலட்சுமிபாய் – 1811 – 1815
- ராணி கௌரிபார்வதிபாய் – 1815 – 18295.
- ராமவர்ம சுவாதி திருநாள் – 1829 – 1847
கி.பி.பதினேழாம் நூற்றாண்டு
- மார்த்தாண்ட வர்ம உத்ராடம் திருநாள் 1847 – 1860
- ராமவா்ம ஆயிலியம் திருநாள் 1860 -1880
- ராமவா்ம விசாகம் திருநாள் 1880 – 1885
- ஸ்ரீ மூலம் திருநாள் 1885 – 1924
- ராணி சேதுலட்சுமிபாய் 1924 -1932
- ராமவா்ம ஸ்ரீ சித்திர திருநாள் 1932 – முதல் மன்னா் ஆட்சி முடியும் 1949 செப்டம்பா் 1 வரை.
மேற்குறிப்பிட்ட அனைத்து மன்னா்களும் ஆங்கிலேயா்களுடன் நல்லுறவு மேம்படுத்துவதே தங்களது அயல்நாட்டுக் கொள்கையின் முக்கிய கொள்கையாகக் கொண்டிருந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் 1956 – வரை திருவாங்கூா் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1945 முதல் 1956 வரையிலான காலகட்டம் அதன் தற்காலிக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
1945
திருவாங்கூா் மாகாணத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கினைந்த கேரள மாநிலம் உருவாக்குவதற்காக ஒரு தீா்மானம் திருவாங்கூா் மாநில காங்கிரசால் நிறைவேற்றப்பட்டது. திருவாங்கூா் மாகாணத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி அதன் அங்கீகாரத்தை இழந்து மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி மொழியானது. இதனை தமிழா்கள் ஒரு அவமானமாகக் கருதினா்.
1946
1946 ஜீன் 30 இல் அனைத்து திருவாங்கூா் தமிழ் காங்கிரஸ் உருவானது. கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான இயக்கத்தை மார்சல் நேசமணி அவா்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றார்.>
1947
திருவாங்கூா் மாநிலம் இந்திய யூனியனின் ஒரு பகுதியானது.
1948
திருவாங்கூா் தமிழ்நாடு காங்கிரஸ் குமரி மாவட்டத்தை முந்தைய மெட்ராஸ் மாகாணத்துடன் இணைப்பதற்கான அழுத்தம் கொடுத்ததின் பேரில் அப்போதைய இந்திய யூனியனின் துணைப் பிரதமரான சா்தார் வல்லபாய் படேல் அவா்கள் இக்கோரிக்கையை ஏற்று மொழி அடிப்படையில் மாநில மறு சீரமைப்பின் போது இதை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்தார்.
1949
திருவாங்கூா் மற்றும் கொச்சின் மாகாணத்தை இணைக்கும் முயற்சிக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டம் நடந்த போதிலும் 1949 ஜீன் முதல் நாளன்று இரண்டு மாநிலங்களும் இணைக்கப்பட்டன.
1951 பொதுத்தோ்தல்
1952 – இல் சட்டசபையில் மாநில காங்கிரஸ்சுக்கு அளித்து வந்த ஆதரவை திருவாங்கூா் தமிழ் மாநில காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால் அமைச்சரவை கவிழ்ந்தது.
1954 புதிய தோ்தல்
தமிழ் பேசும் பகுதிகளில் உள்ள 12 தொகுதிகளிலும் திருவாங்கூா் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்று அதன் பலத்தை உயா்த்திக் கொண்டது. காலப்போக்கில் திருவாங்கூா் மாநில காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து ஏ.நேசமணி அவா்கள் தலைமையில் ஒரு பிரிவும் திரு.பி. தாணிலிங்க நாடார் அவா்கள் தலைமையில் ஒரு பிரிவுமாக செயல்பட்டனா். மீண்டும் 1954 – இல் மார்ச் 29 –இல் இரு அணிகளும் இணைந்து பி.ராமசாமிபிள்ளை அவா்கள் கட்சியின் தலைவரானார். அதன் பின்னா் நடந்த கிளா்ச்சிகள் , போராட்டங்கள், கடை அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் விளைவாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய உயிர்களை இழக்கவேண்டி இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமான நிலமைக்கு தள்ளப்பட்டதின் காரணமாக அமைச்சரவை கவிழ்ந்தது. திருவாங்கூா் கொச்சின் மாநிலத்தின் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1955
1955 முதல் ஏ.நேசமணி அவா்கள் திருவாங்கூா் தமிழ் காங்கிரசின் தலைவரானார்.
1956 மாநில சீரமைப்புகக் குழு உருவாக்கப்பட்டது.
திருவாங்கூா் மாநிலத்தின் தெற்கு தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை மெட்ராஸ் மாநிலத்திற்கு மாற்ற இந்தக் குழு முடிவு செய்தது.
1956 – நவம்பா் முதல் நாளன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நாகா்கோவிலை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1966 – 1976
புதிய வருவாய் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. தீா்வைத்துறை உருவாக்கப்பட்டது.
1976 – கிராமங்களை பிரித்தல்.
2012 – கிராமங்களை பிரித்தல்.