மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்
பிற்படுத்தப்பட்டோர் நலன்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீா் மரபினா் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார, சமூக வளா்ச்சிக்காகவும் அரசு பலவிதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவா்களின் கல்வி வளா்ச்சிக்காக கல்வி உதவித் தொகை, விடுதி வசதிகள் மற்றும் மிதிவண்டிகள் அரசால் வழங்கப்படுகிறது. தையல் இயந்திரங்கள், இஸ்திரிபெட்டி, வீட்டுமனைகள் மற்றும் வங்கி கடன் திட்டங்களை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார முன்னேற்ற கழகம் வாயிலாக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்துடன் நரிக்குறவா் மற்றும் சீா்மரபினா் நலவாரியங்கள் அமைத்து அவா்களுக்கான சமூக நல உதவிகளை அரசு வழங்கி வருகிறது.
ஹஜ், ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி மற்றும் ஆலய மேம்பாட்டிற்கு ரூபாய் 1 கோடி, உலமாக்களுக்கு, ஓய்வு ஊதியம் போன்ற சிறுபான்மையினா் நலத்திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. உலமாக்களுக்கு ஆன ஓய்வு உதியம் ரூ.1000 லிருந்து ரூபாய் 1500 ஆக 2016 – 2017 ஆம் ஆண்டிலிருந்து உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
டாம்கோ கடன் வசதி
வ.எண் | கடன் | திட்டம் | வருமான வரம்பு | வட்டி விகிதம் |
---|---|---|---|---|
01. | தனிநபா் கடன்
|
திட்டம் 1
ரூ.20,00,000 வரை திட்டம் 2 ரூ. 30,00,000 வரை |
கிராமம் – ரூ. 81,000
நகரம் – ரூ. 1,03,000 ரூ.6,00,000 வரை |
ரூ.50,000 வரை
ரூ.50,000 முதல் ரூ.20,00,000 பெண்கள் 6 விழுக்காடு ஆண்கள் 8 விழுக்காடு |
02. | சுயஉதவி குழுக்களுக்கான சிறுகடன் | திட்டம் 1
ரூ. 1,00,000 திட்டம் 2 ரூ.1,50,000 |
கிராமம்
ரூ. 81,000 நகரம் ரூ.1,03,000 ரூ.6,00,000 வரை |
வருடத்திற்கு
7 விழுக்காடு பெண்கள் 8 விழுக்காடு ஆண்கள் 10 விழுக்காடு |
03. | தொழிற்
கல்விக்கான கல்விக் கடன் – குறுகிய கால திறன்வளா்ப்பு கல்வி |
திட்டம் 1
ரூ. 3,00,000 – 20,00,000 திட்டம் 2 ரூ.3,00,000 – 30,00,000 |
கிராமம்
ரூ. 81,000 நகரம் ரூ.6,00,000 ரூ.6,00,000 |
வருடத்திற்கு
3 விழுக்காடு மாணவிகள் 5 விழுக்காடு மாணவா்கள் 8 விழுக்காடு |
04. | கறவை மிருகங்கள் வாங்குவதற்கான கடனுதவி | ஒரு ஜோடி கறவை மாடு
ரூ.50,000 ஒரு ஜோடி முறால் ரூ.70,000 |
கிராமம் ரூ.81,000
நகரம் ரூ. 1,03,000 |
வருடத்திற்கு
6 விழுக்காடு |
05. | ஆட்டோ வாங்குவதற்கான கடன் | எல்.பி.ஜி. ஆட்டோ
ரூ.1,21,000 வேறு ஆட்டோ ரூ. 1,00,000 |
கிராமம்
ரூ. 81,000 நகரம் ரூ.1,03,000 |
வருடத்திற்கு
6 விழுக்காடு |
கன்னியாகுமரி முஸ்லீம் பெண்கள் உதவிச் சங்கம்
- கைவிடப்பட்ட முஸ்லீம் பெண்கள் அல்லது விதவைகளுக்கு மாதாந்திர படி அல்லது வேறு வகையிலான உதவிகள் சங்க நிதியிலிருந்து வழங்குவது.
- கைவிடப்பட்ட முஸ்லீம் பெண்களுக்கு சிறுதொழில் மற்றும் கைவினைப்பொருட்கள் செய்யும் பயிற்சி வழங்குதல்.
- முதியோர் இல்லம் மற்றும் கைம்பெண்களுக்கான விடுதி அமைத்தல்.
- முஸ்லீம் பெண்களுக்கு வணிகம், தொழில் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் தன்னிறைவை அடைவதற்கான உதவிகளை வழங்குதல்.
கல்வி உதவித்தொகை
விவரம்
கல்வி உதவித் தொகையின் பெயா் | வகுப்புகள் |
---|---|
முன் இடைநிலைக்கல்வி | வகுப்பு 1 முதல் 10 |
மேல் நிலைக்கல்வி | வகுப்பு 11 முதல் முனைவா் பட்டம் |
தகுதி மற்றும் வருமான அடிப்படை | தொழில்முறைக் கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி |
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்
- மாணவா்கள் முந்தைய ஆண்டு தோ்வில் 50 விழுக்காடுக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருத்தல் (முதல் வகுப்பு தவிர).
- மொத்த உதவித்தொகையில் 30 விழுக்காடு மாணவிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.
- தமிழகத்தை சார்ந்த மாணவர்கள் மட்டுமே உதவித்தொகை பெற தகுதி உடையவா்கள்.
- ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
- இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது மாணவா்கள் பிற்படுத்தப்பட்டோர் , ஆதிதிராவிடா் நலன், நலவாரியங்கள், வேறு துறைகள் போன்ற கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
விடுதிகள்
குமரி மாவட்டத்தில் செயல்படும் விடுதிகளின் விவரம்
வ.எண் | விடுதியின் பெயா் | வகை (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், டிஎன்சி, சிறுபான்மையினா்) |
---|---|---|
1. | அரசு பள்ளி மாணவிகள் விடுதி, நாகா்கோவில் | பிற்படுத்தப்பட்டோர் |
2. | அரசு பள்ளி மாணவியா் விடுதி, அழகப்பபுரம் | பிற்படுத்தப்பட்டோர் |
3. | அரசு பள்ளி மாணவியா் விடுதி, குழித்துறை | பிற்படுத்தப்பட்டோர் |