பள்ளி கல்வி துறை
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்
தமிழகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இடைநிலைக் கல்வியை உறுதி செய்வதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2009-2010ம் நிதி ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கீழ்காணும் நோக்கங்களை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிக்கோள்கள்
- ஐந்து கி.மீ தொலைவிற்குள் பள்ளி வசதியற்ற குடியிருப்புக்களுக்கு ஒரு உயர்நிலைப்
பள்ளியையும், 7-10 கி.மீ தொலைவிற்குள் ஒரு மேல்நிலைப்பள்ளியையும் ஏற்படுத்துதல். - 2017ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கம் இடைநிலைக்கல்வியை அளித்து நூறு விழுக்காடு
சேர்க்கையை உறுதி செய்தல். - அனைத்து மாணவர்களையும் 2020ஆம் ஆண்டுக்குள் நூறு விழுக்காடு தக்க வைத்தல்.
- சமூக, பொருளாதார, பாலினப் பாகுபாடு மற்றும் இயலாத் தன்மை போன்ற தடைகளால்
- குழந்தைகள் பாதிக்கப்படாமல், வாழ்க்கைக்கு உகந்த தரமான கல்வியைப் பெறுவதை
உறுதி செய்தல்.
வகுப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
- வகுப்பறைக்கட்டிடங்கள்
- தலைமை ஆசிரியர் அறை
- அலுவலக அறை
- நூலகம்
- ஆய்வகம்
- குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள்
- கணினி அறை
- கலை/கைத்தொழில் அறை
தரமான கல்வி ஏற்படுத்திக் கொடுத்தல்
- கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்
- பள்ளிகளுக்கு மானியம் வழங்குதல்
- ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல்
- கணினி வழி கற்றல்
வ.எண் | பள்ளியின் வகைகள் | மொத்தப் பள்ளிகள் |
---|---|---|
1. | துவக்கப் பள்ளிகள் | 556 |
2. | நடுநிலைப் பள்ளிகள் | 204 |
3. | உயர்நிலைப் பள்ளிகள் | 204 |
4. | மேல்நிலைப் பள்ளிகள் | 252 |
5. | மொத்தம் | 1216 |
வ.எண் | மேலாண்மை வகை | துவக்கப் பள்ளிகள் | நடுநிலைப் பள்ளிகள் | உயர்நிலைப் பள்ளிகள் | மேல்நிலைப் பள்ளிகள் | மொத்தம் |
---|---|---|---|---|---|---|
1. | பள்ளிக் கல்விதுறை | 278 | 95 | 75 | 54 | 502 |
2. | ஆதி திராவிடர் நலத்துறை | 6 | 2 | 0 | 4 | 12 |
3. | நிதியுதவி பெறும் பள்ளிகள் | 117 | 40 | 52 | 81 | 290 |
4. | சுயநிதி பள்ளிகள் | 6 | 17 | 8 | 4 | 35 |
5. | மெட்ரிக் பள்ளிகள் | 149 | 49 | 65 | 104 | 567 |
6. | சி.பி.எஸ்.இ பள்ளிகள் | 0 | 0 | 5 | 5 | 10 |
7. | பஞ்சாயத்து பள்ளிகள் | 149 | 0 | 0 | 0 | 0 |
8. | நகராட்சி பள்ளிகள் | 0 | 0 | 0 | 0 | 0 |
9. | மாநகராட்சி பள்ளிகள் | 0 | 0 | 0 | 0 | 0 |
10. | கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா | 0 | 0 | 0 | 0 | 0 |
கன்னியாகுமரி | 556 | 203 | 205 | 252 | 1216 |
வ. எண் |
வட்டாரம் | தொடக்கப் பள்ளிகள் 1-5 | நடுநிலைப் பள்ளிகள் 6-8 | மொத்த மாணவர்கள் 1-8 | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆண் | பெண் | மொத்தம் | ஆண் | பெண் | மொத்தம் | ஆண் | பெண் | மொத்தம் | ||
1. | தோவாளை | 1449 | 1182 | 2631 | 1948 | 1639 | 3587 | 3397 | 2821 | 6218 |
2. | அகஸ்தீஸ்வரம் | 9144 | 8160 | 17304 | 10149 | 10504 | 20653 | 19293 | 18664 | 37957 |
3. | இராஜாக்கமங்கலம் | 2348 | 2171 | 4519 | 2295 | 1870 | 4165 | 4643 | 4041 | 8684 |
4. | குருந்தன்கோடு | 3561 | 3203 | 6764 | 4070 | 4064 | 8134 | 7631 | 7267 | 14898 |
5. | தக்கலை | 4112 | 3698 | 7810 | 4189 | 4052 | 8241 | 8301 | 7750 | 16051 |
6. | திருவட்டார் | 3192 | 2620 | 2812 | 3246 | 2984 | 6230 | 6438 | 5604 | 12042 |
7. | மேல்புறம் | 3257 | 2948 | 6205 | 4132 | 4135 | 8267 | 7389 | 7083 | 14472 |
8. | கிள்ளியூர் | 4783 | 4297 | 9080 | 3846 | 3878 | 7724 | 8629 | 8175 | 16804 |
9. | முஞ்சிறை | 3400 | 3209 | 6609 | 3621 | 3599 | 7220 | 7021 | 6808 | 13829 |
கன்னியாகுமரி | 35246 | 31488 | 66734 | 37496 | 36725 | 74221 | 72742 | 68213 | 140955 |
மாணவர்களின் விவரம் – மேலாண்மை வாரியாக
பள்ளி மானியம்
1.அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்ட வழிகாட்டுதல்கள் (Frame Work for implementation of RMSA) வழிமுறைகள் (Norms) வகுக்கப்பட்டதின்படி கீழ்க்கண்டவாறு செலவினம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு ஆய்வக உபகரணங்களை மாற்றியமைத்தல், அறிவியல் செயல்முறைகளுக்கான உபகரணங்கள், வேதிப்பொருட்கள் வாங்குதல் மற்றும் இதர கற்றல் கற்பித்தல், உபகரணங்கள் தேவையின் அடிப்படையில் கொள்முதல் செய்தல் போன்றவற்றிற்காக தொகை ரூ.25000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) வரை செலவினம் மேற்கொள்ளலாம்.
- புத்தகம், தினசரி, வார, நாளிதழ்கள்வாங்கவும், மத்திய, மாநில அரசுகள் பரிந்துரைத்த ஆசிரியர்களுக்கான குறிப்புப் புத்தகங்கள் Reference Books), பள்ளி நூலகத்திற்குத் தேவையான புத்தகங்கள் வாங்குவது போன்றவற்றிற்கு ரூ.10000/-(ரூபாய் பத்தாயிரம்) வரை செலவினம் மேற்கொள்ளலாம்.
- பள்ளியின் தொடர் செலவினங்களான விளையாட்டு, இசை, ஓவியம் கற்பித்தலுக்கான உபகரணங்கள், விளையாட்டு சீருடைகள், பள்ளிசம்மந்தமாக தற்செயலாக நடத்தும் கூட்ட செலவினம், போக்குவரத்து மற்றும் எழுது பொருட்கள் வாங்க, தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, இணையதள கட்டணம் மற்றும் வரிகள் போன்றவற்றிற்கு ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம்) செலவினம் மேற்கொள்ளலாம்.
வ.எண் | பள்ளிகளின் எண்ணிக்கை | தொகை(ரூ) |
---|---|---|
1. | 133 | 66,50,000 |
பணியிடை பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு போதிக்கம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பணியிடை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் பாடப்பொருள் சார்ந்து 5 நாட்களும், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கையாளுதல் குறித்து ஆசிரியர்களுக்கு 2 நாட்களும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலுக்கான 2 பயிற்சியும், பாலின வேறுபாடு தொடர்பான 1 நாள் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. 2016-17 கல்வியாண்டில் பாட வாரியாக பயிற்சிகள் வழங்கப்பட்ட விவரம்
வ.எண் | பாடம் | பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம் | மொத்த செலவினம் |
---|---|---|---|
1. | தமிழ் | 448 | 449580 |
2. | ஆங்கிலம் | 47 | 49370 |
3. | கணிதம் | 427 | 429420 |
4. | அறிவியல் | 500 | 504750 |
5. | சமூக அறிவியல் | 378 | 376540 |
மொத்தம் | 1800 | 1809660 |
தலைமையாசிரியாகளுக்கான தலைமைப்பண்பு பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு 16 நாட்கள் தலைமைப்பண்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் 10 நாட்கள் தலைமைப்பண்பு பயிற்சியும் 3 நாட்கள் களப்பணியிற்சியும் 2 நாட்கள் மீளாய்வு மற்றும் ஒருநாள் பள்ளி மேம்பாட்டு திட்டம் என திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.
2016-17 ஆம் கல்வியாண்டில் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி வழங்கப்பட்ட விவரம்.
வ.எண் | தலைப்பு | தலைமையாசிரியர்களின் எண்ணிக்கை | மொத்த செலவினம் |
---|---|---|---|
1. | தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி (களப்பணி – 16 நாட்கள்) | 7 | 8400 |
மொத்தம் | 7 | 8400 |
புதிய பள்ளிகள்: நோக்கம் நிறைவேற நிர்ணயக்கப்பட்ட இலக்குகள்
- ஐந்து கி.மீ தொலைவிற்குள் பள்ளி வசதியற்ற குடியிருப்புக்களுக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்துதல்.
- சமூக, பொருளாதார, பாலினப் பாகுபாடு மற்றும் இயலாத் தன்மை போன்ற தடைகளால் குழந்தைகள் பாதிக்கப்படாமல், வாழ்க்கைக்கு உகந்த தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்துதல்.
நடுநிலைப் பள்ளியினை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தேவையான முக்கிய காரணிகள்
-
- 5 கி.மீ சுற்றுளவில் உயர்நிலைப்பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் / நடுநிலைப்பள்ளிகள்.
- எஸ்.சி./ எஸ்.டி/ சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் இடம்.
- 8ம் வகுப்பில் 40 மாணவர்களுக்கு மேலுள்ள நடுநிலைப்பள்ளிகள்
.
ஆண்டு வாரியாக நடுநிலை பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரம்
வ.எண் | தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு | பள்ளிகளின் எண்ணிக்கை | செலவீனம் மேற்கொண்ட விவரம் (ரூ.இலட்சத்தில்) |
---|---|---|---|
1. | 2009-10 | 1 | 71.12 |
2. | 2010-11 | 1 | 144.90 |
3. | 2011-12 | 5 | 34.10 |
மொத்தம் | 7 | 250.12 |
மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வி (IEDSS)
குறிக்கோள்
எட்டாம் வகுப்பை பூர்த்தி செய்த அனைத்து மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களும் நான்காண்டு இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை (9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) தொடர்வதற்க்கான வாய்ப்பாக மத்திய அரசின் இத்திட்டம் அமைந்துள்ளது. கல்வி வாய்ப்புகளையும் வசதிகளையும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு பொது கல்வி முறைகளில் இடைநிலை வகுப்பில் அளித்தல். இடைநிலைக் கல்வியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்.
திட்ட பணிகள்:
-
- இடைநிலைக் கல்வியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டுஅவர்களுக்குத் தேவையான கற்றலை அளவிடல்
மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கற்றல் தேவைக்கேற்ப உபகரணங்களை வழங்குதல்
- எல்லா விதமான கட்டிட வசதிகளையும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்தல்
- அனைத்து மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கும் கற்றல் சாதனங்களை
வழங்குதல்
-
- மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் எளிதில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பாசிரியர்களுடன் கூடிய வள மையங்களைதோற்றுவித்தல்
- உள்ளடங்கிய கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களிலும் மாதிரிப் <பள்ளிகளை உள்ளடங்கிய வசதியுடன் ஏற்படுத்துதல்
திட்டக்கூறு வ.எண் | திட்டத்தின் பெயர் | 31.03.2017 முடிய இத்திட்டத்தில் மேற்கொண்ட செலவினம் |
---|---|---|
1.1 | சுற்றுச்சூழல் கட்டமைப்பு | 90,000 |
1.2 | பள்ளித் தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் | 45,000 |
1.3 | ஊதியம் | 12,29,328 |
1.4 | உதவியாளர் | 90,000 |
1.5 | மருத்துவமுகாம் | 44,800 |
1.6 | வாசிப்பாளர் மதிப்பூதியம் | 32,500 |
1.7 | மாணவியர்களுக்கான உதவித்தொகை | 4,42,000 |
1.8 | போக்குவரத்து மதிப்பூதியம் | 2,48,500 |
மொத்தம் | 22,22,128 |