வட்டக் கோட்டை
வட்டக் கோட்டை
📖 விளக்கம்: கன்னியாகுமரியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வட்டக்கோட்டை அமைந்துள்ளது. வட்டக்கோட்டை கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்துள்ள பழங்கால கோட்டையாகும். மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோட்டை வட்டக்கோட்டை என பெயர் பெற்றிருந்தாலும் இது செவ்வக வடிவில் உள்ளது. இது 18ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் இராஜியத்தின் படைத்தளமாகவும் போர் முகமாகவும் திகழ்ந்தது. இது கிழக்கிந்திய கம்பெனியின் முன்னாள் கடற்படை தளபதி கேப்டன் எஸ்டேசியஸ் டி லனாய் என்பவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இவர் பின்னாளில் (18ஆம் நூற்றாண்டு) திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்டவர்னின் படைத்தளபதி ஆவார். டி லனாய் திருவாங்கூர் முழுவதும் மேற்கொண்ட படைசீரமைப்பில் ஒரு பகுதியாக கட்டப்பட்டதே வட்டக்கோட்டை. வட்டக்கோட்டைக்கும் பத்மநாபபுரம் அரண்மனைக்கும் நடுவே 4 அடி அகலத்தில் ஒரு சுரங்கப்பாதை இருந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த பாதை மூடப்பட்டுள்ளது. இந்த வட்டக்கோட்டை செல்வச் செழிப்பான துறைமுகமாக விளங்கிய குமரி துறைமுகத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட இராணுவ தளம் ஆகும். இங்கு பாண்டிய சின்னமான மீன் சில இடங்களில் காணப்படுவதால் இந்தக் கோட்டை சில காலம் பாண்டியர்கள் வசமும் இருந்ததாக நம்பப்படுகிறது. இங்க கடல் அமைதியாக உள்தால் இது சுற்றுலா செல்வதற்கு ஏற்ற தலம். இந்த கோட்டைக்கு அருகில் ஓடும் சிறு ஓடையும் பச்சைப் பசேல் என்று காணப்படும் சுற்று வட்டாரமும் மனதை கொள்ளைக் கொள்ளும். இந்த வட்டக்கோட்டை அருகே உள்ள கடற்கரை கருப்பு மணலுக்கு பெயர் போனது. இது கன்னியாகுமரியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரின் பல பகுதியிலிருந்து வட்டக்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது.
🕒 நேரம்:
📞 அவசர தொடர்பு எண்கள்
- காவல்: 100
- தீயணைப்பு: 101
- ஆம்புலன்ஸ்: 108
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
- உள்ளாட்சி நிர்வாகம்: லீபுரம் கிராம ஊராட்சி (9443651735)
- சுற்றுலா துறை: 9176995866
📍 வழியைப் பெறுங்கள்:
🚌 பேருந்து விவரங்கள்
Bus Terminal | Route No. | Via |
---|---|---|
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் | 1A, 1C,1E,2C | அண்ணா பேருந்து நிலையம், சுசீந்திரம் |
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் | 1A,1C,1E,2C | கோட்டார், சுசீந்திரம் |
கன்னியாகுமரி பேருந்து நிலையம் | 1A,1H,2K 21, 22 501,566, 566A | விவேகானந்தபுரம், மாதவபுரம் |
மார்த்தாண்டம் பேருந்து நிலையம் | ||
களியக்காவிளை பேருந்து நிலையம் |
📷 பட தொகுப்பு

