மூடுக

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை

📖 விளக்கம்: பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் இருந்து சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பத்மநாபபுரம் அரண்மனை (விஷ்ணுவின் நகரம்), பண்டைய வரலாற்று நகரம். இந்த அரண்மனை கி.பி. 1592-1609 ல் திருவாங்கூரை ஆண்ட இறவி வர்மா குலசேகர பெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601ல் கட்டப்பட்டது. திருவாங்கூர் மன்னர்களின் ராஜிய உறைவிடமாக இந்த அரண்மனை திகழ்ந்தது. கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகராக திகழ்ந்தது. இந்த அரண்மனை வளாகம் 185ஏக்கரில் மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் வேலி மலையில் உள்ளது. இது கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 52கி.மீ. தொலைவிலும் தக்கலையிலிருந்து 2கி.மீ. தொலைவிலும் உள்ளது. மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956ன் படி இந்த அரண்மனை கேரள அரசின் ஆளுகைக்கு மாறியது. இந்த அரண்மனை கேரளா தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நவீன திருவாங்கூரை வடிவமைத்த மார்த்தாண்ட வர்மா, மரத்தாலான நவராத்திரி மண்டபத்தை கற்களால் மாற்றி அமைத்தார். 1744இல் பெருமாள் கொட்டாரம் என்னும் 4 அடுக்கு உப்பரிகை மாளிகையையும் புதுப்பித்து வடிவமைத்தார். இம்மாளிகை 1904ல் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரிய உத்திகளின்படி புதுப்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த அரண்மனையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதில் பாரம்பரிய பொருட்கள் கல்வெட்டுகள், செப்புத் தகடுகள், கல் மற்றும் மரத்தால் ஆன சிற்பங்கள், நாணயங்கள் மற்றும் படைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1994இல் இந்த அருங்காட்சியகம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அரண்மனையின் முக்கிய பகுதிகள் - பூமுகம் (நுழைவு மண்டபம்), மந்திர சாலை (அவை மண்டபம்), மணிமேடை (மணிக்கூண்டு), நாடக சாலை (கதகளி நடனம் ஆடம் இடம்), ஊத்துபுரம் (உணவுக்கூடம்), தாய்க் கொட்டாரம், உப்பரிகை மாளிகை (அடுக்கு மாளிகை), கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம், இந்திர விலாசம் மற்றும் சந்திர விலாசம். நுழைவுக் கட்டணம்: பெரியவர்கள் ரூ.40ஃ-, குழந்தைகளுக்கு ரூ.10ஃ-, கேமரா கட்டணம்.ரூ.60ஃ- அயல்நாட்டவருக்கு கட்டணம்.ரூ.320ஃ- அயல்நாட்டு சிறுவர்கள் ரூ.110ஃ- (நேரம்: காலை 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மதியம் 2.00 முதல் 4.30 வரை (அனைத்து திங்கட்கிழமைகளும் விடுமுறை).

🕒 நேரம்: 9:00 a.m. to 1:00 p.m & 2:00 p.m. to 04:30 p.m

📞 அவசர தொடர்பு எண்கள்

  • காவல்: 100
  • தீயணைப்பு: 101
  • ஆம்புலன்ஸ்: 108
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
  • உள்ளாட்சி நிர்வாகம்: பத்மநாபபுரம் நகராட்சி (04651-253119)
  • சுற்றுலா துறை: 9176995866

📍 வழியைப் பெறுங்கள்:

🚌 பேருந்து விவரங்கள்

Bus TerminalRoute No.Via
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்313,349, 350தக்கலை
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்13J, 13N, 11Lவில்லுக்குறி,தக்கலை
கன்னியாகுமரி பேருந்து நிலையம்349,350சுசீந்திரம்,நாகர்கோயில், தக்கலை
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்
களியக்காவிளை பேருந்து நிலையம்

📷 பட தொகுப்பு

×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051782-2-scaled.jpg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051782-2-scaled.jpg"]; let currentIndex = 0; function openModal(i) { currentIndex = i; document.getElementById('modalImage').src = images[i]; document.getElementById('imageModal').style.display = 'flex'; } function closeModal() { document.getElementById('imageModal').style.display = 'none'; } function nextImage() { currentIndex = (currentIndex + 1) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function prevImage() { currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function getLocationAndRedirect() { if (navigator.geolocation) { navigator.geolocation.getCurrentPosition(function(position) { const lat = position.coords.latitude; const lon = position.coords.longitude; const url = "https://www.google.com/maps/dir/?api=1&origin=" + lat + "," + lon + "&destination=encodeURIComponentPadmanabhapuram Palace, Chakala, Thuckalay, Tamil Nadu 629175"; window.location.href = url; }, function() { alert('Could not get location'); }); } } window.onload = function() { document.getElementById('mapBtn').addEventListener('click', getLocationAndRedirect); document.getElementById('img0').addEventListener('click', function() { openModal(0); }); document.getElementById('img1').addEventListener('click', function() { openModal(1); }); }