மூடுக

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

📖 விளக்கம்: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு என்னும் ஊர் அங்கு காணப்படும் நீர்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றது. திற்பரப்பு அருவி நாகர்கோவிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்து அருவி கோதையாறு நதியில் அமைந்துள்ளது. கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது. இது பேச்சிப்பாறை அணையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நீர் வீழ்ச்சி 300 அடி நீளமும் முற்றிலும் பாறைகளால் அமைந்து ஆற்றுப்படுகையும் கொண்டது. இந்த அருவி 50 அடி உயரம் கொண்டது. வருடத்தில் 7 மாதம் இந்த அருவி அதிக அளவு நீருடன் சீற்றத்துடன் காணப்படும். இந்த நீர் வீழ்ச்சியின் மேற்பரப்பில் 250 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள திற்பரப்பு நீர் தேக்கத் திட்டமானது, சுற்றுவட்டார வயல்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது. இந்த நீர் வீழ்ச்சிக்கு அருகில் ஒரு நீச்சல் குளமும் பூங்காவும் உள்ளது. படகு சவாரியும் சுற்றுலா செல்வோரின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் கால்மிதிப் படகு வசதியும் உள்ளது. ஆற்றின் இடதுபக்கக் கரையில் நீர்வீழ்ச்சிக்கும் நீர்தேக்கத்திற்கும் நடுவே மகாதேவர் கோவில் (சிவன் கோவில்) உள்ளது. இது பன்னிரெண்டு சிவாலயங்களுள் மூன்றாவது சிவாலயமாகும். இந்த கோவிலில் சிவபெருமான் வீரபத்திரன் என்னும் உக்கிர வடிவில் உள்ளார். இந்தக் கோவிலில் 9ஆம் நூற்றாண்டைச் சோர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இது 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும். திற்பரப்பு அருவிக்கு அனுமதிக்கப்படும் நேரம் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.

🕒 நேரம்: 6:00 a.m. to 6:00 p.m.

📞 அவசர தொடர்பு எண்கள்

  • காவல்: 100
  • தீயணைப்பு: 101
  • ஆம்புலன்ஸ்: 108
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
  • உள்ளாட்சி நிர்வாகம்: திற்பரப்பு பேரூராட்சி (04651-277156) |
  • சுற்றுலா துறை: 9176995866

📍 வழியைப் பெறுங்கள்:

🚌 பேருந்து விவரங்கள்

Bus TerminalRoute No.Via
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்313A,341,350தக்கலை, திருவட்டார்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்350நாகர்கோயில், தக்கலை, குலசேகரம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்89A, PHS-32, 458ஆத்தூர், திருவட்டார்
களியக்காவிளை பேருந்து நிலையம்458மார்த்தாண்டம்,ஆத்தூர், திருவட்டார்

📷 பட தொகுப்பு

×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051664-scaled.jpg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051664-scaled.jpg"]; let currentIndex = 0; function openModal(i) { currentIndex = i; document.getElementById('modalImage').src = images[i]; document.getElementById('imageModal').style.display = 'flex'; } function closeModal() { document.getElementById('imageModal').style.display = 'none'; } function nextImage() { currentIndex = (currentIndex + 1) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function prevImage() { currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function getLocationAndRedirect() { if (navigator.geolocation) { navigator.geolocation.getCurrentPosition(function(position) { const lat = position.coords.latitude; const lon = position.coords.longitude; const url = "https://www.google.com/maps/dir/?api=1&origin=" + lat + "," + lon + "&destination=encodeURIComponentThiruparappu Waterfalls, 97W65WV, Water Falls, Tiruparapu, Tamil Nadu 629151"; window.location.href = url; }, function() { alert('Could not get location'); }); } } window.onload = function() { document.getElementById('mapBtn').addEventListener('click', getLocationAndRedirect); document.getElementById('img0').addEventListener('click', function() { openModal(0); }); document.getElementById('img1').addEventListener('click', function() { openModal(1); }); }