சிற்றார் அணை – II
சிற்றார் அணை - II
📖 விளக்கம்: சிற்றார் அணை - II அணை கன்னியாகுமரியில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிற்றார் அணை - II கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த அணை மண் அணைகளில் ஒன்றாகும். இது 1964-1969 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 28.57 மீ.கம் மற்றும் மண் அணையின் நீளம் 1134 மீ. இந்த நீர்த்தேக்கம் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை ஆகிய இரண்டிலும் தண்ணீர் பெறுகிறது. சீதோஷ்ண நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தப் பகுதி எப்போதும் இனிமையானதாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அணை, இயற்கை சீதோஷ்ண நிலை மற்றும் இப்பகுதியின் அழகால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அணையின் நடுவே சிறு திவுகள் அமைந்துள்ளது. மாநில அரசு திட்டம் 2021-2022 ஆம் ஆண்டு 3.40 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் செய்தவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
🕒 நேரம்:
📞 அவசர தொடர்பு எண்கள்
- காவல்: 100
- தீயணைப்பு: 101
- ஆம்புலன்ஸ்: 108
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
- உள்ளாட்சி நிர்வாகம்: கடையல் பேரூராட்சி (04651-281261)
- சுற்றுலா துறை: 9176995866
📍 வழியைப் பெறுங்கள்:
🚌 பேருந்து விவரங்கள்
Bus Terminal | Route No. | Via |
---|---|---|
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் | 341 | தக்கலை, குலசேகரம் |
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் | ||
கன்னியாகுமரி பேருந்து நிலையம் | ||
மார்த்தாண்டம் பேருந்து நிலையம் | 86 Sector | அருமனை, கலியல் |
களியக்காவிளை பேருந்து நிலையம் |
📷 பட தொகுப்பு

