மூடுக

அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்

📖 விளக்கம்: இப்பகுதியில் பிரசித்தி பெற்ற குமரி அம்மனாலேயே இந்த ஊர் கன்னியாகுமரி என பெயர் பெற்றது. அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த கோயில் 3000 ஆண்டுகளுக்கு முன்னாள் பரசுராமானால் கட்டப்பட்டு பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டதாகும். இங்கு பகவதி அம்மன் கன்னியாக நின்று பாணாசுரன் என்னும் அசுரனை நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று வதம் செய்தார். இந்தக் கோவில் பார்வதி தேவி கன்னியாக நின்று தவம் புரிந்த காலத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது ஆகும் பார்வதி தேவி இந்தியாவின் தெற்குகடற்கரையை பாதுகாப்பது போல நிற்கின்றாள். பார்வதி தேவி வலது கையில் பூமாலையுடன் கிழக்கு நோக்கி தவம் புரியும் கோலத்தில் நிற்கிறாள். பார்வதி தேவியின் சிலை பரசுராம முனிவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. குமரி அம்மனின் மூக்குத்தியிலிருந்து வரும் ஒளியானது கலங்கரை விளக்கத்தின் ஒளியை ஒத்திருப்பதாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் பயணித்த கப்பலானது, இம்மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்கு ஒளி என்று கருதி பாறையில் மோதி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோவில் கடற்கரையில் அமைந்திருந்தாலும் இங்குள்ள கிணற்று நீர் உப்பாக இல்லாமல் சுவையாக இருக்கும். மே, ஜீன் மாதங்களில் தேர் திருவிழாவும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் 9 நாட்கள் நவராத்திரி திருவிழாவும் இந்த கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு உள்நாடு மற்றும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். திருக்கோயில் திறக்கப்படும் நேரம் காலை 4.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

🕒 நேரம்: 4:30 a.m. to 12:30 p.m & 4:00 p.m. to 08:30 p.m

📞 அவசர தொடர்பு எண்கள்

  • காவல்: 100
  • தீயணைப்பு: 101
  • ஆம்புலன்ஸ்: 108
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
  • உள்ளாட்சி நிர்வாகம்: கன்னியாகுமரி நகராட்சி (04652-246279)
  • சுற்றுலா துறை: 9176995866

📍 வழியைப் பெறுங்கள்:

🚌 பேருந்து விவரங்கள்

Bus TerminalRoute No.Via
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்1,2,303அண்ணா பேருந்து நிலையம், கோட்டார், சுசீந்திரம், கொட்டாரம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்1,2,303சுசீந்திரம், கொட்டாரம்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்303தக்கலை, நாகர்கோவில்
களியக்காவிளை பேருந்து நிலையம்303தக்கலை, நாகர்கோவில்

📷 பட தொகுப்பு

×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051798-scaled.jpg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051798-scaled.jpg"]; let currentIndex = 0; function openModal(i) { currentIndex = i; document.getElementById('modalImage').src = images[i]; document.getElementById('imageModal').style.display = 'flex'; } function closeModal() { document.getElementById('imageModal').style.display = 'none'; } function nextImage() { currentIndex = (currentIndex + 1) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function prevImage() { currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function getLocationAndRedirect() { if (navigator.geolocation) { navigator.geolocation.getCurrentPosition(function(position) { const lat = position.coords.latitude; const lon = position.coords.longitude; const url = "https://www.google.com/maps/dir/?api=1&origin=" + lat + "," + lon + "&destination=encodeURIComponentArulmigu Devi Kanniyakumari Baghavathi Amman Temple, 3HH2P9H, Temple Rd, Kanniyakumari, Tamil Nadu 629702"; window.location.href = url; }, function() { alert('Could not get location'); }); } } window.onload = function() { document.getElementById('mapBtn').addEventListener('click', getLocationAndRedirect); document.getElementById('img0').addEventListener('click', function() { openModal(0); }); document.getElementById('img1').addEventListener('click', function() { openModal(1); }); }