பள்ளி கல்வி துறை
அனைவருக்கும் கல்வி இயக்கம் – கன்னியாகுமரி மாவட்டம்
தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை (1 முதல் 8ம் வகுப்பு வரை)
1.எளிமைப்படுத்தபட்ட செயல்வழி கற்றல் முறை ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ளது:
ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலும் எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்ற முறையும், ஐந்தாம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் திறனை அளவிட தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பின்பற்றபடுகிறது.
- செயல் வழி கற்றல் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை – 380
- அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை – 171
2. பள்ளி அணுகல்
இம்மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி வசதியில்லாத குடியிருப்புகள் 37, நடுநிலைப் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகள் 14, இந்த குடியிருப்புகளில் புதிய பள்ளி தொடங்க மற்றும் தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஏதுவாக பகுதிகள் இல்லாததால் இக்குடியிருப்புகளின் உள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து / பாதுகாவலர் வசதிக்கான கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
3. பள்ளி கட்டமைப்பு பணிகள்
பள்ளிகளில் கற்றல் சூழ்நிலையை மேம்படுத்தும் வகையில் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை, குடிநீர் வசதிகள், ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறை, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கழிப்பறை அமைத்திட பள்ளி மேலாண்மைக் குழுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள்
பணி விவரம் | இலக்கு | சாதனை | நிலுவை | குறிப்பு |
---|---|---|---|---|
ஆண்கள் கழிப்பறை | 11 | 11 | இல்லை | மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கழிப்பறை மீதி தொகை 3-2018 ல் வழங்கப்பட்டது. |
பெண்கள் கழிப்பறை | 1 | 1 | இல்லை | |
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கழிப்பறை | 39 | 16 | 24 | |
பழுதடைந்த வகுப்பறை கட்டடம் பராமரிப்பு | 10 | 10 | இல்லை | |
மொத்தம் | 61 | 37 | 24 |
கணினி வழி கற்றல் மையம்
கணினி வழி கற்றலை மேம்படுத்துவதற்காக அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டன.
பள்ளிகளின் எண்ணிக்கை | ஒரு பள்ளிக்கு வழங்கப் பட்ட கணினிகளின் எண்ணிக்கை | மொத்தம் வழங்கப்பட்ட கணினிகளின் எண்ணிக்கை |
---|---|---|
18 | 3 | 4 |
4.பள்ளி செல்லாத / இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி
ஒவ்வொரு வருடமும் கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளிகள் மற்றும் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகின்றனர்.
பள்ளிச்செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
வ.எண் | வட்டார வளமையத்தின் பெயர் | இலக்கு | கண்டறியப் பட்ட குழந்தைகள் எண்ணிக்கை | சிறப்பு பயிற்சி – மாணவர்களின் எண்ணிக்கை | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
நீண்ட கால இணைப்பு சிறப்பு பயிற்சி | குறுகிய கால இணைப்பு சிறப்பு பயிற்சி | உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி | மாற்றுத் திறன் கொண்ட பள்ளிச் செல்லா குழந்தைகள் நேரடி சேர்க்கை | நேரடி சேர்க்கை | மொத்தம் | ||||
1 | தோவாளை | 76 | 115 | 114 | 0 | 0 | 0 | 0 | 114 |
2 | அகஸ்திஸ்வரம் | 81 | 82 | 82 | 0 | 0 | 0 | 0 | 82 |
3 | இராஜாக்கமங்கலம் | 32 | 33 | 33 | 0 | 0 | 0 | 0 | 33 |
4 | குருந்தன்கோடு | 39 | 40 | 39 | 0 | 0 | 1 | 0 | 40 |
5 | தக்கலை | 32 | 28 | 14 | 0 | 0 | 1 | 13 | 28 |
6 | திருவட்டார் | 33 | 23 | 15 | 0 | 0 | 0 | 8 | 23 |
7 | மேல்புறம் | 36 | 41 | 36 | 0 | 0 | 0 | 0 | 36 |
8 | கிள்ளியூர் | 33 | 30 | 30 | 0 | 0 | 0 | 0 | 30 |
9 | முஞ்சிறை | 37 | 48 | 32 | 0 | 0 | 0 | 0 | 32 |
மொத்தம் | 339 | 440 | 395 | 0 | 0 | 2 | 21 | 418 |
5.பணியிடைப் பயிற்சி
ஆசிரியர்களின் கற்பித்தல் உத்திகளை மேம்படுத்துவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவிலும் வட்டார வளமைய அளவிலும் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பணியிடைப் பயிற்சி இலக்கு சாதனை(குறுவளமைய அளவில்)
வ. எண் | பயிற்சி விவரம் | நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை | அடைவு | சதவீதம் |
---|---|---|---|---|
1 | தொடக்கநிலை (குழந்தைகளின் அடைவு நிலை சார்ந்த கலந்துரையாடல்) | 1948 | 1807 | 93 |
2 | உயர் தொடக்கநிலை (குழந்தைகளின் அடைவு நிலை சார்ந்த கலந்துரையாடல்) | 1869 | 1752 | 64 |
3 | தொடக்கநிலை (கற்றல் விளைவுகள்) | 1948 | 1813 | 93 |
4 | உயர் தொடக்கநிலை (கற்றல் விளைவுகள்) | 2235 | 1869 | 84 |
5 | தொடக்கநிலை (கேள்விக் கலை) | 1948 | 1731 | 89 |
6 | உயர் தொடக்கநிலை (கேள்விக் கலை) | 2235 | 1638 | 73 |
பணியிடைப் பயிற்சி இலக்கு சாதனை(வட்டார வளமைய அளவில்)
வ. எண் | பயிற்சி விவரம் | நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை | அடைவு | சதவீதம் |
---|---|---|---|---|
1 | எளிய முறையிலான படைப்பாற்றல் கல்வி பயிற்சி | 615 | 586 | 95 |
2 | படைப்பாற்றல் முறை கல்வி பயிற்சி | 1869 | 1686 | 90 |
3 | பாட பொருள் சார்ந்த தொடக்க நிலை வலுவூட்டல் பயிற்சி | 1948 | 1811 | 93 |
4 | பாட பொருள் சார்ந்த உயர் தொடக்க நிலை வலுவூட்டல் பயிற்சி | 2235 | 1979 | 89 |
6.மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி ( ஐநு ):
இத்திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், வீட்டு மட்ட பயிற்சி, பள்ளி ஆயத்த மைய பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அட்டவணைப்படி மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளி ஆயத்த மையத்திலும் சாதாரண பள்ளிகளிலும் மற்றும் வீட்டு மட்ட பயிற்சியிலும் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள்.
வ.எண் | வட்டார வளமையத்தின் பெயர் | மாற்றுத்திறனாளி குழந்தைகளின் எண்ணிக்கை | பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை | பள்ளி ஆயத்த மையத்தில் பயிற்சி பெறும் குழந்தைகள் | வீட்டு மட்ட பயிற்சி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை | ஐநுஞ மூலம் மதிப்பீடு செய்த மாணவர்கள் | மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்ட விவரம் | சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைபயிற்றுநர்கள் விவரம் | ஆளுஐநுனு முவை வழங்கப்பட்ட பள்ளிகள் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தொடக்கநிலை | உயர் தொடக்க நிலை | |||||||||
1 | தோவாளை | 152 | 132 | 214 | 20 | 50 | 284 | 0 | 5 | 10 |
2 | அகஸ்திஸ்வரம் | 272 | 242 | 429 | 20 | 65 | 514 | 1 | 7 | 6 |
3 | இராஜாக்கமங்கலம் | 156 | 139 | 242 | 22 | 31 | 295 | 2 | 5 | 11 |
4 | குருந்தன்கோடு | 159 | 141 | 250 | 21 | 29 | 300 | 1 | 5 | 23 |
5 | தக்கலை | 152 | 161 | 264 | 17 | 32 | 313 | 1 | 6 | 15 |
6 | திருவட்டார் | 127 | 118 | 217 | 15 | 13 | 245 | 1 | 5 | 11 |
7 | மேல்புறம் | 181 | 169 | 279 | 22 | 49 | 350 | 2 | 6 | 13 |
8 | கிள்ளியூர் | 174 | 156 | 258 | 23 | 49 | 330 | 0 | 6 | 8 |
9 | முஞ்சிறை | 175 | 169 | 264 | 23 | 57 | 344 | 1 | 5 | 11 |
மொத்தம் | 1548 | 1427 | 2417 | 183 | 375 | 2975 | 9 | 50 | 108 |
7.பள்ளி மானியம்:
கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்குவதற்காக பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
8.பராமரிப்பு மானியம்:
அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக வருடந்தோறும் பராமரிப்பு மானியம் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.