மூடுக

விவேகானந்தா் நினைவு மண்டபம் - திருவள்ளுவா் சிலை

விவேகானந்தா் நினைவு மண்டபம்

சுவாமி  விவேகானந்தா் ஞானமுக்தி அடைந்ததை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டதே விவேகானந்தா் நினைவு மண்டபம் ஆகும்.  வாவத்துறையிலிருந்து 500 மீ. தொலைவில் அமைந்துள்ள இரு பாறைகளில், பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டது இந்த மண்டபம் ஆகும்.  திரு.ஏக்நாத் ரானடே என்பவரின் இடைவிடாத முயற்சியால் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த மண்டபம் கட்டப்பட்டது. இது 1970 ம் ஆண்டு நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.  இங்கு பொது மக்கள் தியானிப்பதற்காக ஒரு தியான மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் இந்தியாவின் பல்வேறு மாநில கட்டிடக் கலையினை ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டது. இங்கு விவேகானந்தரின் திருஉருவச்சிலை அமைந்துள்ளது. இது இரு பிரிவாக உள்ளது. – விவேகானந்தா் மண்டபம்,  ஸ்ரீபாத மண்டபம். நேரம் – காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.விவேகானந்தபுரம் – 100 ஏக்கா்  நிலப் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விசாலமான வளாகம் விவேகானந்த கேந்திரத்தின் தலைமையிடமாகும். இங்கு ஒரே நேரத்தில் 1000 போ் தங்கும் இட வசதி உண்டு. விவேகானந்தரின் புகைப்பட காட்சித் தொகுப்பும் நூலகமும் இங்கு உள்ளது.  தொலைபேசி – 91 – (0)4652 – 246250

திருவள்ளுவா் சிலை

திருவள்ளுவா் என்னும் தமிழ் புலவரின் 133 அடி உயர சிலை முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில், கடலின் உள்ளே விவேகானந்தா் மண்டபம் இருக்கும் பாறைக்கு அருகே உள்ள பாறையில் அமைந்துள்ளது. 95 அடி உயர திருவள்ளுவா் சிலை திருக்குறளின் 38 அதிகாரங்களைக் கொண்ட நல்லொழுக்கம் என்னும் பாடல் தொகுப்பை குறிக்கும் வகையில் 38 அடி உயர பீடத்தில் அமைந்துள்ளது. நல்லொழுக்கமே மனிதனின் செல்வ செழிப்பிற்கும் இன்பத்திற்கும் மூலகாரணம் என்பதை விளக்கும் வகையில் இந்த 133 அதிகாரங்களைக் குறிக்கும் 133 அடி உயர பீடம் மற்றும் சிலை திகழ்கிறது. 7000 டன் எடைக் கொண்ட இந்த திருவள்ளுவா் சிலை இடுப்பு பகுதியில் ஒரு சிறிய வளைவுடன் காணப்படுகிறது. இதை வடிவமைத்தவா் டாக்டா்.வி. கணபதி ஸ்தபதி. இந்த மூன்று அடுக்கு ஆதார பீடத்தை சுற்றி கலை வேலைப்பாடு மிக்க 38 அடி உயரம் உள்ள அலங்கார மண்டபம் உள்ளது. இந்த அலங்கார மண்டபத்தை சுற்றி 10 யானைகள் 8 திசைகளை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளவா் சிலை ஜனவரி 1, 2000ம் ஆண்டு திறக்கப்பட்டது. நேரம் – காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.

புகைப்பட தொகுப்பு

  • விவேகானந்தர் திருவள்ளுவர் நினைவு சிற்பங்கள்
  • விவேகானந்தர் நினைவு மண்டபம்
  • சூர்ய அஸ்தமனம்

அடைவது எப்படி:

வான் வழியாக

வான் வழியாக : திருவனந்தபுரம் விமான நிலையம். அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக காந்தி மண்டபம் வந்தடையலாம்.

தொடர்வண்டி வழியாக

கன்னியாகுமரி ரயில் நிலையம் / நாகர்கோவில் ரயில் நிலையம்

சாலை வழியாக

திருவனந்தபுரதிலிருந்து 90 கி மி . நாகர்கோயிலிருந்து 19 கி மி மகாத்மா காந்தி மண்டபம் உள்ளது