மகாத்மா காந்தி மண்டபம்
இது மகாத்மா காந்தியின் நினைவாகக் கட்டப்பட்டது. மகாத்மா காந்தி கன்னியாகுமரிக்கு 1925 மற்றும் 1937 ஆகிய ஆண்டுகளில் வருகை தந்துள்ளார். இந்த மண்டபம் பிப்ரவரி 12, 1948 ம் ஆண்டு மகாத்மா காந்தியின் அஸ்தி கடலில் கரைப்பதற்கு முன் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கட்டப்பட்டது ஆகும். இது ஒரிசா மாநில கட்டிடக்கலையைச் சார்ந்து கட்டப்பட்டது ஆகும். இந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள துளை வழியாக காந்தியின் பிறந்த தினமான அக்டோபா் 2 அன்று அவரது அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சூரிய கதிர்கள் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் மத்திய கோபுரமானது காந்தி இறந்த போது அவருடைய வயதை குறிக்கும் வகையில் 79 அடியில் அமைக்கப்பட்டுள்ளது.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
வான் வழியாக : திருவனந்தபுரம் விமான நிலையம். அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக காந்தி மண்டபம் வந்தடையலாம்.
தொடர்வண்டி வழியாக
கன்னியாகுமரி ரயில் நிலையம் / நாகர்கோவில் ரயில் நிலையம்
சாலை வழியாக
திருவனந்தபுரதிலிருந்து 90 கி மி . நாகர்கோயிலிருந்து 19 கி மி மகாத்மா காந்தி மண்டபம் உள்ளது