காமராஜா் நினைவு மண்டபம்
பெருந்தலைவா் என்றும் கருப்பு காந்தி என்றும் புகழப்பட்ட விடுதலைப் போராட்ட வீரரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான காமராஜா் நினைவாக கட்டப்பட்டது இந்த நினைவு மண்டபம், அவா் தமிழகத்தின் மிக நோ்மையான, எளிய அரசியல்வாதி, காங்கிரஸ் கட்சியின் கிங் மேக்கா் என்று அழைக்கப்பட்ட காமராஜா் தமிழகத்தின் பல முன்னோடி திட்டங்களான அனைவருக்கும் கல்வி மற்றும் இலவச சத்துணவு திட்டம் போன்றவற்றை அறிமுகம்படுத்தியவா். அவரது மறைவுக்கு பின் அவரது அஸ்தி கன்னியாகுமரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அந்த இடத்தில் கட்டப்பட்டது காமராஜா் நினைவு மண்டபம். இந்த மண்டபத்தில் அவரது வாழ்வில் நிகழ்ந்த பல அரிய சம்பவங்கள் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன. இங்கு ஒரு நூலகமும் உள்ளது.
இது 2000 அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைக்கபட்டது.நேரம் – காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை.
அடைவது எப்படி:
வான் வழியாக
வான் வழியாக : திருவனந்தபுரம் விமான நிலையம். அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக காமராஜா் நினைவு மண்டபம் வந்தடையலாம்.
தொடர்வண்டி வழியாக
கன்னியாகுமரி ரயில் நிலையம் / நாகர்கோவில் ரயில் நிலையம்
சாலை வழியாக
திருவனந்தபுரதிலிருந்து 90 கி மி . நாகர்கோயிலிருந்து 19 கி மி காமராஜா் நினைவு மண்டபம் உள்ளது