வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், ஊரக மகளிரின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 செம்மறி ஆடுகள் / வெள்ளாடுகள், 2 ஆண்டுகளுக்கான காப்பீடு, போக்குவரத்து மற்றும் தீவனச் செலவிற்காக ரூ.2,500/- மற்றும் ஓராண்டிற்குப் பிறகு ரூ.2,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் செயல்படும் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இணையதளம்: https://tnahschemes.tn.gov.in |
27/11/2026 | 17/12/2026 | பார்க்க (70 KB) |