மூடுக

வேளாண்மைத்துறை

வேளாண்மைத்துறை

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இலக்கியத்தில் வகைப்படுத்தப்படும் ஐவகை நிலங்களில் நால்வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலங்களை உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைவதற்கு முன்பு கேரள மாநிலத்தின் நெற்களஞ்சிமாக திகழந்த நாஞ்சில் நாடு இம்மாவட்டத்தை உள்ளடக்கியதே ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12000 எக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மாநிலத்திலேயே நீர்தேங்கிய ஏலாக்களில் நெல் சாகுபடி செய்வது இம்மாவட்டத்தில் மட்டுமே. கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இரு பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பயறு வகைகள் சுமார் 900 எக்டரில் நஞ்சை தரிசில் சாகுபடி செய்யப்படுகிறது. வாழை 6305 எக்டரிலும், தென்னை 23988 எக்டர் பரப்பிலும் பணப்பயிரான ரப்பர் சுமார் 26810 பரப்பிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

உட்கட்டமைப்புகள்

அரசு விதைப்பண்ணை – திருப்பதிசாரம்

அரசு விதைப்பண்ணையின் சாகுபடி பரப்பு 31.6 ஏக்கர் ஆகும். தரமான ஆதரம் மற்றும் சான்று விதைப்பண்ணைகள் உற்பத்தி செய்யப்பட்டு விதைப்பண்ணை அமைக்கவும் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்திடவும் பயன்படுத்தப்படுகிறது.

அரசு தென்னை நாற்றுப்பண்ணை – புத்தளம்

அரசு தென்னை நாற்றுப்பண்ணை மூலம் தரமான நெட்டை, நெட்டை X குட்டை மற்றும் குட்டை X நெட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படுகிறது.

தென்னை ஒட்டு மையம் – தென்தாமரைகுளம்

நெட்டை X குட்டை மற்றும் குட்டை X நெட்டை ரக நெற்றுகள் ஒட்டு சேர்ப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உரக்கட்டுப்பாடு மையம் – நாகர்கோவில்

விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் உர மாதிரிகள் உரக்கட்டுப்பாடு ஆய்வகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தரமற்ற மாதிரிகள் கண்டறியப்படுகிறது.

மண் பரிசோதனை நிலையம் – நாகர்கோவில்

விவசாயிகளின் நிலங்களில் கிரிட் முறையில் மண்மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு முடிவுகளின்படி மண்வள அட்டைகள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

நடமாடும் மண் பரிசோதனை நிலையம் – நாகர்கோவில்

நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களில் உள்ள மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகளின்படி விவசாயிகளுக்கு உரப்பரிந்துரை செய்யப்படுகிறது.

உழவர் பயிற்சி நிலையம் – நாகர்கோவில்

உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்கு கிராமிய அளவில் பயிற்சி நடத்தப்படுகிறது. தொழல் நுட்பங்கள், செயல்விளக்கங்கள் மூலம் செய்து காட்டப்படுகிறது.

வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

I.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் (NADP) – Rashtriya Krishi Vikas Yojana

வேளாண்மையில் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் ஒருங்கிணைந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ ஆறு உப இனங்களில் இம்மாவட்டத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

  • நெல் உற்பத்தி திட்டம்
  • பயறு பெருக்க திட்டம்
  • பசுந்தாள் பயிர்கள் மூலம் மண்வள மேம்பாடு திட்டம்
  • தென்னங்கன்றுகள் விநியோகம்
  • தென்னையில் இனக்கவர்ச்சி பொறி மூலம் சிகப்பு கூன்வண்டு கட்டுப்பாடு
  • சூரிய விளக்கு பொறிகள் விநியோகம்

2017-18 நிதி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.31.945 இலட்சம் மதிப்பில் 1445 பயனாளிகளுக்கு நல திட்டங்கள் இத்திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

II. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் (NFSM) – பயறு

பயறு உற்பத்தியில் உற்பத்தி திறனுக்கும் இயல்பான உற்பத்திக்கு இடையே உள்ள இடைவெளியினை குறைக்கும் நோக்கில் பயறு விதை உற்பத்தி பயறு விதைகள் விநியோகம் உயிர் உர விநியோகம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் விநியோகம், பயிர் பாதுகாப்பு கருவிகள் விநியோகம் ஆகிய இனங்களின்கீழ் ரூபாய் ஐந்து இலட்சம் மதிப்பில் 1206 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

III. தென்னை வளர்ச்சி வாரிய திட்டம்
a.தென்னை செயல் விளக்கம் அமைத்தல்

ரூ.4.8 இலட்சம் மதிப்பில் தென்னையில் செயல்விளக்கங்கள் 44 பயனாளிகளின் தோப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது.

b.நோயுள்ள தென்னை மரங்களை அகற்றி புதிய மரம் நட்டு தோப்புகளை பராமரித்தல் திட்டம்

நோயுற்ற மற்றும் காய்ப்பு குறைந்த தென்னை மரங்களை அகற்றி புதிய தென்னங்கன்றுகளை நட்டு தோப்புகளை பராமரிக்கும் திட்டம் 2016-17 மற்றும் 2017-18 ரூ.228.5 இலட்சம் மதிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு 1633 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

IV. மண்வள அட்டை இயக்கம் 2017-18

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் மண்வள அட்டை இயக்கம் 2017-18 நோக்கமானது விவசாயிகளுக்கு கிரிட் மண் மாதிரிகளை இலவசமாக ஆய்வு செய்து உர பரிந்துரைகளுடன் கூடிய மண்வள அட்டைகளை வழங்குதல், உரச்செலவை குறைத்தல் மற்றும் குறைவாக உரங்களை உபயோகப்படுத்த வலியுறுத்துதல் ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு 7997 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 42.282 மண்வள அட்டைகள் உரிய விவசாயிகளிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

V. பிராதன மந்திரி பசல் பீமா யோஜனா: (PMFBY)

பயிர் சுழற்சியில் பயிர்களின் அனைத்து நிலைகள் மற்றும் அறுவடைக்கு பகின்னரும் இயற்கை இடர்காலங்களில் குறைநத அளவில் காப்புறுதித் தொகையில் பயிர் காப்பீடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி தேசிய பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் 2016-17-ம் ஆண்டு நெற்பயிரில் காப்பீடு செய்து 525 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ரூ.41.26 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டு நெற்பயிரில் காரிப் பருவத்தில் 516 விவசாயிகள் 307.9 எக்டர் பரப்பிலும், ராபி பருவத்தில் 819 விவசாயிகள் 409.6 எக்டர் பரப்பிலும் காப்பீடு செய்துள்ளனர். 2017-18-ம் ஆண்டிற்கு இழப்பீடு வழங்குவது காப்பீடு நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது.

VI. பிரதம மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா (PMKSY) நுண்ணீர் பாசன திட்டம்

2017-18-ம் ஆண்டு சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் கருவி அமைத்திட 780 எக்டர் பரப்பிற்கு ரூ.115 இலட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டு பாசன கருவி நிறுவும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

VII. விதைக்கிராம திட்டம்

தரமான விதைகள் உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான சான்று பெற்ற நெல் விதைகள் 150 மெ.டன் மற்றும் 56 மெ.டன் உளுந்து விதைகள் துறை மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

எஞ்சிய விவசாயிகள் தம்மிடையே தரமான விதைகளை பரிமாற்றம் செய்திட ஏதுவாக விதைக்கிராம திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பில் தரமான விதைகள் வழங்கப்பட்டு விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டது.

வேளாண்மைப் பொறியியல் துறை

அதிகார வரம்பு பதவியின் பெயா் அலுவலக விபரம் தொடா்பு எண்
மாநில அளவிலான அலுவலகம் தலைமைப் பொறியாளா் (வே.பொ)
(அனைத்து மாவட்டங்களுக்கும்)
தலைமைப் பொறியாளா் (வே.பொ)
487, அண்ணா சாலை,
நந்தனம், சென்னை -35
e mail – aedce@tn.nic.in
044-2435 2686,
044-2435 2622
மண்டலம் அளவிலான அலுவலகம் கண்காணிப்புப் பொறியாளா் (வே.பொ)
(கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும்
தூத்துக்குடி மாவட்டங்களுக்கு)
கண்காணிப்புப் பொறியாளா் (வே.பொ),
5சி, சி-காலனி, பெருமாள்புரம்,
திருநெல்வேலி-7
email – aedsetnv@tn.nic.in
0462 -2534646
மாவட்ட அளவிலான அலுவலகம் செயற் பொறியாளா் (வே.பொ)
(கன்னியாகுமரி மாவட்டத்திற்கு)
செயற் பொறியாளா் (வே.பொ)
833, தொழிற்பேட்டை, கோணம்,
நாகர்கோவில்-4
email – aedeengl @ gmail.com
04652-260681
நாகர்கோவில் வருவாய் கோட்டம் உதவி செயற்பொறியாளா்(வே.பொ)
(அகஸ்தீஸ்வரம்,ராஐாக்கமங்கலம் மற்று்ம
தோவாளை ஊராட்சி ஒன்றியம்)
செயற் பொறியாளா் (வே.பொ)
833, தொழிற்பேட்டை, கோணம்,
நாகர்கோவில்-4
email – aeeaedngl @ gmail.com
04652-260181
தக்கலை வருவாய் கோட்டம் உதவி செயற்பொறியாளா்(வே.பொ)
(குருந்தன்கோடு,தக்கலை,திருவட்டார்,
கிள்ளியூர்,முஞ்சிறை மற்றும் மேல்புறம்
ஊராட்சி ஒன்றியம் )
உதவி செயற்பொறியாளா்(வே.பொ)
22/31A, மேட்டுகடை,
பள்ளிவாசல் ரோடு, தக்கலை – 629175
email – Aeeaedthuckalay @ gmail.com
04651-250181
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் உதவிப்பொறியாளா்கள் 9486510421
ராஐாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உதவிப்பொறியாளா்கள் 9442225856
தோவாளை ஊராட்சி ஒன்றியம் உதவிப்பொறியாளா்கள் 9489788986
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் உதவிப்பொறியாளா்கள் 9443450727
தக்கலை ஊராட்சி ஒன்றியம் உதவிப்பொறியாளா்கள் 9442193414
திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் உதவிப்பொறியாளா்கள் 9442193414
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் உதவிப்பொறியாளா்கள் 9443450727
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் உதவிப்பொறியாளா்கள் 9952502059
மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் உதவிப்பொறியாளா்கள் 9952502059

திட்டம் -1

திட்டத்தின் பெயர் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மையை இயந்திரமயமாக்குதல்
நிதி ஒதுக்கீடு மத்திய அரசு – 60 % மற்றும் மாநில அரசு 40%
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களும்
திட்டத்தின் நோக்கம்
  • தேவையான வேளாண் கருவிகளை அறிமுகம் செய்து, வேளாணமையை இயந்திரமயமாக்குதல்
  • வேளாண்மைக்குத் தேவையான வேலையாள் பற்றாக்குறையை நீக்கி, வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடித்தல்
திட்டத்தின் விபரம்

விசை உழுவை, நெல் நாற்று நடும் கருவி, சுழற்கலப்பை, விதைக்கும் கருவி, விதை மற்றும் உரம் இடும் கருவி, தட்டு அமைக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி, களை எடுக்கும் கருவி, நெல் வயலில் களை எடுக்கும் கருவி, வேளாண் கழிவுகளை துகளாக்கும் கருவி, மருந்து அடிக்கும் கருவி போன்ற வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குதல்.

திட்டத்தின் சிறப்பம்சம்
  • சாதாரண விவசாயிகளுக்கு, வேளாண் கருவிகளின் விலையில் 40 % அல்லது அரசால் நிணயிக்கப்பட்ட மானியம், இவற்றில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்

  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு, வேளாண் கருவிகளின் விலையில் 50அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட மானியம் இவற்றில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

  • தலைமைப் பொறியாளா்(வே.பொ) அவாகளால் பட்டியலில் சோத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தைச் சார்ந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம்.

தகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள்
திட்டம் செயல்படுத்தப்படும் காலம் முன்னுரிமை அடிப்படையில், நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
  • வருவாய் கோட்டம் – உதவி செயற் பொறியாளர் (வே.பொ) நாகர்கோவில் / தக்கலை
  • மாவட்டம் – செயற் பொறியாளர் (வே.பொ), நாகர்கோவில்
  • மண்டலம் – கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) திருநெல்வேலி
  • மாநிலம் – தலைமைப் பொறியாளர் (வே.பொ), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35, போன் – 044-2435 2686, 2435 2622

இணைப்பு – 1

வ.எண் வேளாண் இயந்திரம் / கருவியின் பெயர் சராசரி விலை(ரூபாய் இலட்சம்) மானியத் தொகை
சாதாரண விவசாயிகளுக்கு வழங்கப்படும்
அதிகபட்ச மானியத் தொகை (இலட்சம்)
தாழ்த்தப்பட்ட வகுப்பினா, ஆதி திராவிடா,
சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும்
பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் (இலட்சம்)
1 விசை உழுவை ( 8 -BHP க்கு கீழ்) 1.00 0.40 0.50
2 விசை உழுவை (8 BHP- க்கு மேல்) 1.60 0.60 0.75
3 நெல்நாற்று நடும் இயந்திரம் ( 4 வரிசை ) 2.50 0.75 0.94
4 நெல் நாற்று நடும் இயந்திரம் ( 4 வரிசைக்கு மேல்) 17.00 2.00 2.00
5 ரோட்டவேட்டார் 0.90 0.50 0.63
6 விதைக்கும் கருவி / விதை மற்றும் உரம் இடும் கருவி 0.70 0.35 0.44
7 தட்டு அமைக்கும் கருவி( இயந்திர கலப்பை /விசை உழுவை உதவியுடன் இயங்கும்) 3.20 0.50 0.63
8 வைக்கோல் கட்டும் கருவி ( இயந்திர கலப்பை உதவியுடன் இயங்கும்) 3.50 0.50 0.63
9 தோட்டக்கலை பயர்களில் களை எடுக்கும் கருவி / நெற்பயிர்ல் நடந்து கொண்டே களை எடுக்கும் கருவி / புல் வெட்டும் கருவி 1.00 0.15 0.19
10 வேளாண் கழிவுகளை துகளாக்கும் கருவி ( 3HP-க்கு குறைவான எஞ்சின் / மின்மோட்டார் மூலம் இயங்கும்) 0.40 0.16 0.20
11 வேளாண் கழிவுகளை துகளாக்கும் கருவி (3-5HP -க்கு அதிகமான மின்மோட்டார் மூலம் இயங்கும் 0.50 0.20 0.25
12 தெளிப்பான் (இயந்திர கலப்பை உதவியுடன் இயங்கும்) 1.50 0.50 0.63

திட்டம் -2

திட்டத்தின் பெயர் வேளாண் கருவிகள் வாடகை சேவை மையம் அமைத்தல் (தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்)
நிதி ஒதுக்கீடு மத்திய அரசு – 60 % மற்றும் மாநில அரசு 40%
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களும்
திட்டத்தின் நோக்கம்
  • குறு விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளிடையே வேளாண்மைப் பணிகள இயந்திரமயமாக்குதல்

  • பயிரின் தேவைக்கேற்ப வேளாண் பணிகளை இயந்திரமயமாக்குவதன் மூலம் செலவினைக் குறைத்து, விவசாயிகளுக்கு அதிக இலாபத்தை ஈட்டுதல்

  • தேவையான விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இந்திரங்கள் மற்றும் கருவிகள் கிடைக்கச் செய்தல்

திட்டத்தின் விபரம் வேளாண் கருவிகள் வாடகை சேவை மையம் அமைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயிகள் குழுக்களுக்கும் தொழில் முனைவோருக்கும் 40 மானியம் வழங்குதல்
திட்டத்தின் சிறப்பம்சம்
  • வேளாண் கருவிகள் வாடகை சேவை மையம் அமைப்பதற்கு 40% மானியம் அல்லது ரூ.10.00 லட்சம், இவற்றில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்

  • தலைமைப் பொறியாளா (வே.பொ) அவர்களால் பட்டியல் சேர்த்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தைச் சார்ந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம்

தகுதி மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகள், விவசாயிகள் குழு, தொழில் முனைவோர்
திட்டம் செயல்படுத்தப்படும் காலம் முன்னுரிமை அடிப்படையில், நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
  • வருவாய் கோட்டம் – உதவி செயற் பொறியாளர் (வே.பொ) நாகர்கோவில் / தக்கலை
  • மாவட்டம் – செயற் பொறியாளர் (வே.பொ), நாகர்கோவில்
  • மண்டலம் – கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) திருநெல்வேலி
  • மாநிலம் – தலைமைப் பொறியாளர் (வே.பொ), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35, போன் – 044-2435 2686, 2435 2622

திட்டம் -3

திட்டத்தின் பெயர் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் உப இயக்கம்
நிதி ஒதுக்கீடு மத்திய அரசு – 60 % மற்றும் மாநில அரசு 40%
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களும்
திட்டத்தின் நோக்கம்
  • வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள் குறைவாக உள்ள பகுதியில் குறு விவசாயிகள் மற்றும் சிறுவிவசாயிகளிடையே வேளாண்மையை இயந்திரமயமாக்குவதை அதிகரித்தல்.

  • தேவையான விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கிடைக்கும் வகையில் வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் அமைத்தல்

திட்டத்தின் விபரம்

இயந்திர கலப்பை ( 8 HPமுதல் 70HP வரை), சுழற்கலப்பை, விசை உழுவை, (8HP மற்றும் அதற்கு மேல்), நெல் நாற்று நடும் இயந்திரம் (4 வரிசை), களை எடுக்கும் கருவி, புல் வெட்டும் கருவி, வேளாண் கழிவுகளை துகளாக்கும் கருவி, மற்றும் பல்வேறு தானியங்களை அறுவடை செய்யும் இயந்திரம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குதல்.

திட்டத்தின் சிறப்பம்சம்
  • சாதாரண விவசாயிகளுக்கு, வேளாண் கருவிகளின் விலையில் 40 % அல்லது அரசால் நிணயிக்கப்பட்ட மானியம், இவற்றில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

  • தாழ்த்தப்பட்ட வகுப்பினா, ஆதிதிராவிடா, சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு, வேளாண் கருவிகளின் விலையில் 50அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட மானியம் இவற்றில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.

  • தலைமைப் பொறியாளர் (வே.பொ) அவாகளால் பட்டியலில் சோத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தைச் சார்ந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் தங்களின்விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம்.

தகுதி
  • மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

  • மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் / விவசாயிகள் குழு / தொழில் முனைவோர் ஆகியோர் வேளாண் கருவிகள் வாடகை சேவை மையம் அமைக்கலாம்.

திட்டம் செயல்படுத்தப்படும் காலம் முன்னரிமை அடிப்படையில், நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
  • வருவாய் கோட்டம் – உதவி செயற் பொறியாளர் (வே.பொ) நாகர்கோவில் / தக்கலை
  • மாவட்டம் – செயற் பொறியாளர் (வே.பொ), நாகர்கோவில்
  • மண்டலம் – கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) திருநெல்வேலி
  • மாநிலம் – தலைமைப் பொறியாளர் (வே.பொ), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35, போன் – 044-2435 2686, 2435 2622

திட்டம் -4

திட்டத்தின் பெயர் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் வழங்கும் திட்டம்
நிதி ஒதுக்கீடு மாநில அரசு நிதி 40%, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை – 20% மற்றும் தமிழ்நாடு மின்சக்தி உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் -30%
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களும்
திட்டத்தின் நோக்கம்
  • விவசாயத்திற்குத் தேவையான மின்சக்தியை தடையின்றி வழங்குதல்

  • பராமிப்புச் செலவுகளை குறைத்தல்

திட்டத்தின் விபரம்

விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான தண்ணீரை, சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் உதவியுடன் பாய்ச்சும் வகையில் அமைத்தல்.

திட்டத்தின் சிறப்பம்சம்

சூரிய சக்தியானல் இயங்கும் பம்பசெட் ( 5 HP முதல் 10HP வரை ) அமைக்கும் விவசாயிகளுக்கு 90% மானியம் வழங்கப்படும்

தகுதி
  • போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும் திறந்த வெளிக்கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு உடைய விவசாயிகள்.

  • மேலும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பசெட் அமைக்கும் நிலையில், தமிழ்நாடு மின்சக்தி உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இலவச மின்சாரத்திற்காக விண்ணப்பம் செய்த்தை துறக்க முன்வர வேண்டும்
திட்டம் செயல்படுத்தப்படும் காலம் முன்னரிமை அடிப்படையில், நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
  • வருவாய் கோட்டம் – உதவி செயற் பொறியாளர் (வே.பொ) நாகர்கோவில் / தக்கலை
  • மாவட்டம் – செயற் பொறியாளர் (வே.பொ), நாகர்கோவில்
  • மண்டலம் – கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) திருநெல்வேலி
  • மாநிலம் – தலைமைப் பொறியாளர் (வே.பொ), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35, போன் – 044-2435 2686, 2435 2622

வேளாண்மைப் பொறியியல் துறையால் சகோதரத் துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகள்

திட்டம் -5

திட்டத்தின் பெயர் நுண்ணீர் பாசனத் திட்டம்
நிதி ஒதுக்கீடு மத்திய அரசு – 60 % மற்றும் மாநில அரசு 40%
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களும்
திட்டத்தின் நோக்கம்

கிடைக்கின்ற தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி தானிய உற்பத்தியை அதிகித்தல்

திட்டத்தின் விபரம்
  • சொட்டு நீர் பாசனம்.

  • தெளிப்பு நீா் பாசனம்

திட்டத்தின் சிறப்பம்சம் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 100 மானியமும், இதர விவசாயிகளுக்கு 90 மானியமும் வழங்கப்படும்
தகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள்
திட்டம் செயல்படுத்தப்படும் காலம் முன்னரிமை அடிப்படையில், நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
  • வருவாய் கோட்டம் – உதவி செயற் பொறியாளர் (வே.பொ) நாகர்கோவில் / தக்கலை
  • மாவட்டம் – செயற் பொறியாளர் (வே.பொ), நாகர்கோவில்
  • மண்டலம் – கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) திருநெல்வேலி
  • மாநிலம் – தலைமைப் பொறியாளர் (வே.பொ), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35, போன் – 044-2435 2686, 2435 2622

திட்டம் -6

திட்டத்தின் பெயர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்
நிதி ஒதுக்கீடு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி தோவாளை வட்டம் (2017-18)
திட்டத்தின் நோக்கம் வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளையும் ஒரே அலுவலகத்தில் ஒருங்கிணைத்தல்
திட்டத்தின் விபரம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் மற்றும் சேமிப்புக் கிடங்கு கட்டுதல்
கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 150.00 லட்சம் ( ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும்)

திட்டம் -7

திட்டத்தின் பெயர் மண் பரிசோதனை நிலையம் மற்றும் உரக்கட்டுப்பாட்டு அலுவலகம்
நிதி ஒதுக்கீடு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி தோவாளை வட்டம் (2017-18)
திட்டத்தின் நோக்கம்
  • விவசாயிகளின் வயல்களில் இருந்து எடுக்கப்படும் மண் மாதிரிகள் மண் பரிசோதனை நிலையத்தில் சோதனை செய்யப்பட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும்.

  • தனியார் உர உற்பத்தி நிலையங்களிலிருந்து உர மாதிரிகள் எடுத்து வந்து உரக்கட்டுபாட்டு ஆய்வகத்தில் சோதனை செய்யப்படுவதால், தரமற்ற உரங்கள் விற்பனை தடுக்கப்படும்.

திட்டத்தின் விபரம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மண் பரிசோதனை நிலையம் மற்றும் உரக்கட்டுபாட்டு ஆய்வகம் அமைத்தல்
கட்டிடத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 120.00 லட்சம் ( ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும்)

திட்டம் -8

திட்டத்தின் பெயர் மாநில விதை உற்பத்தி நிலையம் – கட்டுமானப் பணிகள்
நிதி ஒதுக்கீடு மாநில நிதி
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி வேளாண்மைப் பண்ணை, திருப்பதிசாரம்
திட்டத்தின் நோக்கம் விதையின் தரத்தினை உயா்த்தும் வகையில் வேளாண் பண்ணைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்
திட்டத்தின் விபரம் வேளாண் பண்ணையில் கரை வாய்க்கால்கள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.

திட்டம் -9

திட்டத்தின் பெயர் தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை – கட்டுமானப் பணிகள்
நிதி ஒதுக்கீடு மாநில நிதி
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி தோட்டக்கலைப் பண்ணை, கன்னியாகுமரி மற்றும் பேச்சிப்பாறை
திட்டத்தின் நோக்கம் விதையின் தரத்தினை உயா்த்தும் வகையில் தோட்டக்கலை பண்ணையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்
திட்டத்தின் விபரம் தோட்டக்கலைப் பண்ணை, கன்னியாகுமரி மற்றும் பேச்சிப்பாறையில் நாற்று நடுவதற்கான கலப்பு மண் தயாரிப்பதற்கான இயந்திரம் நிறுவுதல்.
மொத்த நிதி ஒதுக்கீடு தோட்டக்கலை பண்ணை, கன்னியாகுமரி – ரூ. 7.045 லட்சம்
தோட்டக்கலை பண்ணை, பேச்சிப்பாறை – ரூ. 8.00 லட்சம்

திட்டம் -10

திட்டத்தின் பெயர் சுற்றுக் சூழல் பூங்கா அமைத்தல்
நிதி ஒதுக்கீடு வேளாண் மற்றும் கிராமிய வளா்ச்சி வங்கி
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மாநில தோட்டக்கலை பண்ணை, கன்னியாகுமரி
திட்டத்தின் நோக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமான கன்னியாகுமரிக்கு அருகே சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தல்
திட்டத்தின் விபரம்

அலங்கார அமைப்பு, கடைகள், சிற்றுண்டிசாலை, வண்டிகள் நிறுத்துமிடம், வட்ட வடிவ அரங்கம், செயற்கை நீரூற்று போன்ற கட்டுமானங்கள் மற்றும் சிறுவா்கள் பூங்கா, பூந்தோட்டம், மூங்கில் தோட்டம் போன்றவை அமைத்தல்.

மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 400.00 லட்சம்

திட்டம் -11

திட்டத்தின் பெயர் கூட்டுப் பண்ணையம்
நிதி ஒதுக்கீடு மாநில நிதி
திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியத்திற்கும்
திட்டத்தின் நோக்கம்

விவசாயிகள் ஆா்வலர்குழு, விவசாயிகள் உற்பத்தியாளா் குழு மற்றும் விவசாயிகள் உற்பத்தியானா் அமைப்பு ஆகியவை அமைத்து வேளாண்மைக்கான செலவினை குறைத்து வேளாண் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் இலாபத்தினை அதிகரித்தல்.

திட்டத்தின் விபரம்
  • 20 விவசாயிகள் சேர்ந்து விவசாயிகள் ஆா்வலர் குழு அமைத்தல்
  • 5 விவசாயிகள் ஆா்வலர் குழுவினைச் சோ்த்து விவசாயிகள் உற்பத்தியாளர் குழு அமைத்தல்
  • ஒவ்வொரு உற்பத்தியாளா் குழுவிற்கும் அரசு மானியமாக ரூ.5.00 லட்சம் வழங்குதல்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் – ஒரு கண்டோட்டம்.

அ. அக்மார்க்
  • நாகர்கோவில் மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் மாநில அக்மார்க் தரம்பிரிப்பு ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது.

  • மத்திய கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட தேன் மசாலா பொடிகள், தேங்காய் எண்ணெய், நெய் போன்ற வேளாண் பண்டங்களுக்கு தரம்பிரிப்பு மேற்கொள்ளப்பட்டு அக்மார்க் முத்திரைகள் வழங்கப்படுகிறது.

  • மத்திய கட்டுப்பாட்டிற்கு உட்படாத புளி, புளியங்கொட்டை போன்ற பொருட்கள் தரம்பிரிப்பு செய்யப்படுகிது.

  • அக்மார்க் விழிப்புணர்வு குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றது.

  • பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் அக்மார்க் விழிப்புணர்வு குறித்து கருத்து பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆ. வேளாண் வணிகம்
  • வணிகமுறை தரம் பிரித்தல்
  • வேளாண் விளை பொருள் உற்பத்தி குழுக்கள் அமைத்தல்
  • சந்தை படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • அறுவடை பின் செய் நேர்த்தி தொழில் நுட்ப முகாம்கள் நடத்துதல்
  • மதிப்பு கூட்டுதல் மூலம் அதிக வருவாய் பெற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
இ) உழவர் சந்தை
  • விவசாயிகள் நுகர்வோர் நேரடி பரிமாற்றம்
  • நேர்மையான வணிகம், நியாயமான எடை
  • பசுமை மாறா காய் கறிகளும், பழங்களும் நுகர்வோருக்கு கிடைக்க செய்தல்
  • விவசாயிகளுக்கு நியானமான விலை கிடைக்கிறது.

துறையின் முக்கிய பணிகள்

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை 2008-ஆம் வருடம் விரிவு படுத்தப்பட்டு வேளாண்மை துணை இயக்குநர், வேளாண் வணிகம் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இத்துறை அக்மார்க் தரம் பிரிப்பு வேளாண்மை வணிகம் மற்றும் உழவர் சந்தை ஆகிய பணிகளை செயல்படுத்தி வருகிறது.

அக்மார்க் தரம் பிரிப்பு

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப நுகர்வோருக்கு கலப்படமற்ற தரமான உணவு பொருட்கள் கிடைக்க உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தின் தீமைகளிலிருந்து பொதுமக்களை காப்பது அக்மார்க் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அக்மார்க் என்பது அக்ரிகல்சரல் மார்க்கிங் என்பதன் ஆங்கில சுருக்கம். உணவு பொருட்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்கும் உத்திரவாதம் அக்மார்க் தரச்சான்று ஆகும். இது ஒரு தன்ஆர்வத் திட்டம் ஆகும். எனவே தரமான உணவு பண்டிங்களை தயாரிப்பவர்கள் தானே முன் வந்து அதிகாரச் சான்று பெறவேண்டும்.

நமது மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய இரு இடங்களில் அக்மார்க் ஆய்வகங்கள் அமைந்துள்ளன. இவ்வாய்வகத்தில் தேங்காய் எண்ணெய், தேன், மசாலா பொடிகள், புளி அரிசி போன்ற உணவு பொருட்கள் தரம் பிரிக்கப்படுகின்றன.

அக்மார்க் பதிவு பெற்ற உற்பத்தியாளர்கள் தாங்கள் தரம் பிரிக்கும் உணவு பொருட்கள் தயார் நிலை ஆனதும், ஆய்வகத்தில் தகவல் தெரிவிப்பார்கள். இதனைத் தொடர்ந்து ஆய்வக வேளாண்மை அலுவலர் மாதிரி சேகரித்து கொள் கலனுக்கு சீல் வைத்து வருகின்றனர். பின்னர் மாதிரியை ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்து தர அடிப்படையில் அக்மார்க் முத்திரைகள் வழங்கப்படுகிறது. இதனால் உணவு பொருட்கள் விற்பனைக்கு முன்னரே கலப்படம் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. தரம் பாதுகாக்கப்படுகிறது.

வேளாண் விளை பொருள் (தரம் பிரித்தல் மற்றும் குறியிடுதல்) சட்டத்தின் அடிப்படையில் வியாபாரிகள் ஒத்துழைப்புடன் நடைமுறை படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் கலப்படமற்ற தரமான உணவு பொருட்கள் அக்மார்க் முத்திரையுடன் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கலப்பட பொருட்களிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட வானொலி செய்தித்தாள் மற்றும் முகாம்கள் நடத்தி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை பிரச்சாரம் செய்து வருகிறது.

வேளாண் வணிகம்

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற விளை பொருட்களை அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய சந்தை படுத்துதல் தொழில் நுட்பங்களை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக வருவாய் கோட்ட அளவில் இரண்டு வேளாண்மை அலுவலர்களும், வட்டார அளவில் ஒரு உதவி வேளாண்மை அலுவலர் வீதம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்திட விவசாயிகள் அடங்கிய விளைபொருள் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து கொள்முதல் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து விவசாயிகள் நேரடியாக விளைப்பொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் பெற உதவி வருகிறது.

அறுவடையின்போது அறுவடை பின் செய் தொழில் நுட்பங்களை கடைபிடித்து இழப்புகளை தவிர்த்து அதன் மூலம் அதிக வருமானம் பெற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அறுவடை காலங்களில் கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் விளைபொருட்களை தாமதபடுத்தி விற்பனை செய்து நல்ல வருவாய் பெறும் வழிமுறைகள் பற்றி விளக்கி விவசாயிகள் ஒழுங்கு முறை விறைபனை கூடங்களை பயன்படுத்தி பயன் பெற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

வணிகம் முறை தரம் பிரிப்பு மூலம் விவசாயிகளின் விளை பொருட்களை தரம் பிரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிக வருவாய் பெற விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கி வருகிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உழவர் சந்தை மூலம் நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் பெற ஆலோசனை வழங்கி வருகிறது.

விவாசயிகள் தங்கள் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் மூலம் அதிக வருவாய் பெறும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

உழவர் சந்தை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. அவற்றில் வடசேரி உழவர் சந்தை வடசேரி பேருந்து நிலையம் அருகிலும் மற்றொன்று மயிலாடி உழவர் சந்தை நாகர்கோவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. வடசேரி உழவர் சந்தை 22/08/2000 அன்று தொடங்கப்பட்டது. நாளொன்றுக்கு சராசரியாக 19.500 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை ஆகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 19 கிராமங்களிலிருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் 40 முதல் 45 வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

மயிலாடி உழவர் சந்தை முதன் முதலில் 22/04/2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் விவசாயிகளின் வருகை சற்று குறைவானதால் அரசாணை எண்.212, வேளாண்மைத்துறை (வேவி-3) படி 07/09/2001 அன்று மூடப்பட்டது. மீண்டும் 03/06/2006 நாளில் திறக்கப்பட்டது. மயிலாடி உழவர் சந்தையில் நாளொன்றுக்கு சராசரியாக 2.800 மெ.டன் என்ற அளவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மயிலாடி உழவர் சந்தையின் அருகாமையிலுள்ள 7 கிராமங்களிலிருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைகளால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இடைதரகர்கள் இல்லாமல் நுகர்வோர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதால் அதிக லாபம் பெற்று பயனடைந்து வருகிறார்கள். நுகர்வோர்களுக்கும் சரியான எடையில் தரமான காய்கறி மற்றும் பழங்கள் நியாய விலையில் கிடைத்து வருகிறது.

உட்கட்டமைப்பு வசதிகள்
  • நறுமணப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்கும் நோக்கில், தோவாளை வட்டாரம், அருமநல்லூர் வருவாய் கிராமம் ஊரக்கோணத்தில், தேசீய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், மற்றும் விற்பனை குழு நிதியுடன் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் நறுமண வளாகம் கட்டப்பட்டு கிராம்பு விவசாயிகள் சங்கத்தினரால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

  • மலர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலனுக்காக தோவாளையில் கன்னியாகுமரி விற்பனை குழு நிதியில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 75 கடைகளுடன் கூடிய மலர் வணிக வளாகம் திறக்கப்பட்டு நல்லமுறையில் பயன்பாட்டில் உள்ளது.

  • அறுவடைக்காலங்கள் மற்றும் விலை வீழ்ச்சி உள்ள காலங்களில் நெல்லினை சேமித்து வைத்திட தேரூரில் தேசீய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் (2014-15 )கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்பு கிடங்கு கட்டப்ட்டு விவசாயிகளின் பயன்பாட்டிலுள்ளது.

  • வடசேரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நபார்டு, நிதியின் கீழ் 45 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி எடை இயந்திரம் மற்றும் திறந்த விளைபொருள் பரிவர்த்தனை கூடம் விவசாயிகளால் நல்லமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • தேதிய ளோண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (2017-18) ரூ80 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கான மின் அணு கற்பித்தல் மையம் தற்போது வடசேரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தினுள் கட்டப்பட்டு வருகிறது.

தோட்டக்கலைத்துறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர், வாழை, மரவள்ளி, மா, நல்ல மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், பாக்கு, சாமந்தி, சம்பங்கி, அரளி போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் சுமார் 42536 ஹெக்டர் பரப்பில் பயிரிடப்படுகின்றது. விவசாயிகள் இருமடங்கு உற்பத்தி மற்றும் மும்மடங்கு வருமானத்தை ஈட்டுவதே தமிழக அரசின் முக்கிய கொள்கையாகும்.

பாரம்பரிய முறையில் தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்வதற்கு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். உயர்தர தொழில் நுட்பங்களான, பண்ணை இயந்திரமாக்குதல், நுண்ணீர் பாசனத் திட்டம், அறுவடை பின் செய் நேர்த்தி மேலாண்மை முதலிய தொழிற்நுட்பங்களை பின்பற்ற செய்வதின் மூலம் அரசின் கொள்கையினை சாதிக்க முடியும்.

தோட்டக்கலைத்துறையில் முக்கிய நோக்கம் விவசாயிகளை உயர்தர நடவு பொருட்கள் மற்றும் வீரிய ரக விதைகளை பயன்படுத்தி தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பினை விரிவாக்கம் செய்தல், புதிய தொழில் நுட்பங்களான நுண்ணீர் பாசன திட்டம், தேனீ வளர்ப்பின் மூலம் அயல் மகரந்த சேர்க்கை அதிகரிக்க செய்து மகசூலை அதிகரிக்க செய்தல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, பண்ணை இயந்திரமாக்குதல் மற்றும் அறுவடை பின் செய் நேர்த்தி மேலாண்மை போன்ற திட்டங்களை விவசாயிகளை செயல்படுத்த செய்து அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க செய்தல் முதலியவை ஆகும்.

வீரிய ரக காய்கறிகள் செடிகள் அரசு தோட்டக்கலைப்பண்ணைகளில் குழித்தட்டு நாற்றங்களில் உற்பத்தி செய்து குறைந்த விலையில் விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களின் பரப்பினை அதிகரிக்க செய்வதற்காக வழங்கப்படுகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள்

நுண்ணீர் பாசன திட்டம்
பிரதம மந்திரி விவசாய நுண்ணீர் பாசன திட்டம் – MKSY

நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் 40 – 60 சதவிகிதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது. நுண்ணீர் பாசன முறையால் நீர் பயன்பாட்டு திறன் அதிகரிக்கிறது. அதிகமான பயிர் வளர்ச்சி மற்றும் கூடுதல் மகசூல், தரமான விளை பொருட்கள் கிடைக்கிறது. பயிரின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க செய்வதில் நீர் பாசனம் முக்கிய பங்கு வகிக்கின்றது. நீர், உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை தண்ணீரில் கலந்து பயிர்களின் வேர் பகுதியில் பாய்ச்சுவதால் உரம் வீணாவதில்லை. மற்றும் களைகள் வளருவது கட்டுபடுத்தப்படுகிறது. வேலையாட்கள் செலவு குறைகிறது. நுண்ணீர் பாசன திட்டத்தில் முலம் உற்பத்தி திறனை இருமடங்கிற்கு அதிகப்படுத்தி மும்மடங்கு வருமானத்தை ஈட்ட முடியும். தமிழக அரசு நுண்ணீர் பாசன திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது மற்றும் இந்தியாவிலேயே நுண்ணீர் பாசன திட்டத்தில் 100 சதவிகித மானியம் சிறு / குறு விவசாயி மற்றும் 75 சதவித மானியம் இதர விவசாயிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2017 – 2018 நிதியாண்டிற்கு 97 லட்சம் ரூபாய் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு நிதி பெறப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கம்

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் முக்கிய நோக்கம் விவசாயிகளை தோட்டக்கலைப்பயிர்கள் பயிரிட செய்வது ஆகும். இத்திட்டத்தின் மூலம் புதியதாக தோட்டங்களை உருவாக்குதல் திட்டத்தில் மூலம் பல்லாண்டு வாசனை திரவிய பயிர்களான நல்ல மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை மற்றும் வாழை, காய்கறி பயிர்கள், கிழங்கு வகைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தேனீ வளர்ப்பில் மூலம மகரந்த சேர்க்கையை அதிகரிக்க செய்தல் தோட்டக்கலை இயந்திரமாக்குதல், சிப்பம் கட்டும் அறை போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றது. 2017 – 2018 நிதியாண்டில் இத்திட்டத்தின் மூலம் 1770.124 லட்சம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி பெறப்பட்டுள்ளது.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு வகைப் பயிர்கள் வளர்ச்சித் திட்டம், முக்கனி வளர்ச்சி திட்டம், மூலிகை தளைகள், காய்கறி விதை தளைகள் முதலிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2017 – 2018 ம் நிதியாண்டிற்கு 23.53 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.

மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம்

இத்திட்டத்தில் முக்கிய நோக்கம் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் இதன் மூலம் பல் அடுக்கு பயிர், பயிர் சுழற்சி, ஊடுபயிர், பலவகைகள் பயிர்கள் மற்றும் கால்நடை வளர்த்தல், மீன் வளர்த்தல், தேனீ வளர்ப்பு போன்ற தோட்டக்கலையுடன் தொடர்புடைய செயல்களை ஊக்குவித்தல் முதலியவை ஆகும். இத்திட்டத்தில் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2017 – 2018 ஆண்டிற்கு 475 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது (ரப்பர் / வாழை / அன்னாசி / இதர காய்கறி வகைகள்).

பயிர் காப்பீட்டுத் திட்டம் – பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்

இயற்கை இடர்பாடுகளின் போது ஏற்படும் பயிர் இழப்பீட்டிலிருந்து விவசாயிகளை பாதுகாத்திடும் பொருட்டு மத்திய அரசால் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி பயிர்கள் வருவாய் கிராம அளவில் காப்பீடு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி பயிர் காப்பீடு செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, நடவு காலத்தில் பயிர் பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற காரணங்களால் இழப்பீடு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காப்பீடு செய்யும் காலக்கெடு வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்திட்டத்தினை தோட்டக்கலைப் பயிர்களுக்கு செயல்படுத்திட அக்ரிகல்சர் (A.I.C) இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு தோட்டக்கலைப்பண்ணை

அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் முக்கிய நோக்கம் நல்ல தரமான தோட்டக்கலை செடிகள் உற்பத்தி செய்து சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்குவது ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் உள்ளன.

அரசு தோட்டக்கலைப்பண்ணை, கன்னியாகுமரி

திருவாங்கூர் ஸ்ரீ முலம் திருநாள் ராமவர்ம மகாராஜா அவர்களால் 1922 ம் ஆண்டு இப்பண்ணை உருவாக்கப்பட்டது. இப்பண்ணையானது கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை NH47-ல் அமைந்துள்ளது. பண்ணையில் மொத்த பரப்பு 31.64 ஏக்கர் ஆகும். மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி மற்றும் பல வகையான செடிகள் இப்பண்ணையில் சுமார் உற்பத்தி செய்யப்படுகின்றது. வருடம் தோறும் 5 லட்சம் கன்றுகள் உற்பத்தி செய்து பல்வேறு தோட்டக்கலை வளர்ச்சி திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு வருட வருமானம் 65 முதல் 70 இலட்சம் ஆகும்.

அரசு தோட்டக்கலைப்பண்ணை, பேச்சிப்பாறை

அரசு தோட்டக்கலைப்பண்ணை, பேச்சிப்பாறை 1967 ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பண்ணையானது விளவங்கோடு தாலுகாவில் களியல் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பு 15 ஏக்கர் ஆகும். மிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற வாசனை திரவியப் பயிர்கள் மற்றும் முக்கிய வருமானம் தரக் கூடிய செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு கன்னியாகுமரி மற்றும் பக்கத்து மாவட்டங்களில் உள்ள தேவையான விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 6 லட்சம் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் வருட வருமானம் 20 லட்சம் ஆகும்.

நீர் பாசன தொழில் நுட்பங்கள், பண்ணை இயந்திரமாக்குதல் போன்ற புதிய தொழில் நுட்பங்களுக்கு செயல்முறை விளக்க மாதிரியாக இப்பண்ணைகள் விளங்குகின்றன. தற்போது அதிக மகசூல் தரும் மற்றும் வீரிய ரக காய்கறி செடிகள் குழித்தட்டு நாற்றங்களில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

தேனீ வளர்ப்பு – மகத்துவ மையம்

தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் தேனீ வளர்ப்பிற்கான மகத்துவ மையம் ஒன்று அரசு தோட்டக்கலைப் பண்ணை, பேச்சிப்பாறையில் அமைப்பதற்கு ரூபாய் 150 லட்சம் மதிப்பீட்டில் கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேனீ வளர்போர்க்கு உதவிடும் வகையில் பயிற்சி மையம் மற்றும் தேனீக்கள் உற்பத்தி மையம் போன்ற பல வகையான திட்டங்கள் இத்திட்டத்தில் அடங்கி உள்ளது.

ஓகி புயல் வாழ்வாதார திட்டம்

ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட முக்கிய பயிர்களான வாழை மற்றும் ரப்பர் மரங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடுபொருட்கள் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் கூடுதலாக பாதிக்கப்பட்ட விவசாயிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஓகி புயல் சிறப்பு வாழ்வாதார திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய தோட்டக்கலை இயக்கம், மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மறுநடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

உதவி இயக்குநர் அலுவலகம், பட்டுவளர்ச்சித் துறை, தென்காசி

மாநில திட்டம் 2018-2019

வ.எண் திட்டங்கள் பணிகள் விபரம் இயல்பு பணிமுன்னேற்ற அறிக்கை நாள்: 31.05.18 இயல்பு சாதனை சதவீதம் நிதி ஒதுக்கீடு சாதனை சதவீதம் குறிப்பு
இயல்பு நிதி ஒதுக்கீடு (இலட்சத்தில்) இயல்பு நிதி ஒதுக்கீடு (இலட்சத்தில்)
1 மாநில திட்டம் மல்பரி நடவுக்கான ஊக்கத் தொகை வழங்குதல் (ரூ.10,500/- ஏக்கர்) 20.00 2.00 10% திட்டநிதி வழங்கப்படவில்லை. விவசாயிகள் தேர்வு மற்றும் நாற்று உற்பத்தி பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது
புழுவளர்ப்பு மனை கட்டுதல் அலகு மதிப்பு 2,75,000/-
(மானியம் ரூ.82,500/- நிலை 1)
திட்டநிதி வழங்கப்படவில்லை
புழுவளர்ப்பு மனைகட்டுதல்; அலகு மதிப்பு ரூ.1,75,000/-
(மானியம் ரூ.87,500/- நிலை 2)
1எண்ணிக்கை
புழுவளர்ப்பு மனைகட்டுதல்; அலகு மதிப்பு ரூ.1,00,000/- (மானியம் ரூ.63,000/-நிலை 3) 1எண்ணிக்கை
சொட்டுநீர் பாசனம் அமைத்தல் ஏக்கருக்கு (சிறுகுறு விவசாயிக்கு) ரூ.30,000/- வீதம் 5.00 ஏக்கர்
நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் (மதிப்பு ரூ.52,500/-) 2 எண்ணிக்கை

வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம் – 629901, கன்னியாகுமரி மாவட்டம்