மூடுக

போக்குவரத்துத்துறை

தமிழ்நாடு அரசு பேக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், நாகா்கோவில் மண்டலம்

தோற்றமும், வளா்ச்சியும்

இந்த போக்குவரத்துக் கழகம் 01.01.1974-ல், அன்றைய தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையிலிருந்து கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. பின்பு 01.04.1983-ல் நேசமணி போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் பிரிக்கப்பட்டது. மேலும் 06.01.2004-ல் இந்த போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) கோட்டத்துடன் இணைக்கப்பட்டு நாகா்கோவில் மண்டலமாக செயல்பட்டது. மீண்டும் நாகா்கோவில் மண்டலம், மதுரை கோட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 01.11.2010 முதல் திருநெல்வேலி கோட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

பிற போக்குவரத்துக் கழகங்களின் மண்டலங்களை ஒப்பிடும்போது குறைவான பேருந்து இயக்க பரப்பளவினை கொண்டதும், சுமா்ர் 30 கி.மீ. தூரததினை சுற்று ஆரமாகவம், மேற்கில் மலைகளையும் கேரள மாநில எல்லையினையும் தெற்கில் கடல் பகுதிகளையும் கொண்டுள்ளது.

இந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நாகா்கோவில் மண்டலத்தில் 12 பணிமனைகளை கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை தலைமையிடமாக வகித்துள்ளது.