மூடுக

காமராஜர் நினைவு மண்டபம்

காமராஜர் நினைவு மண்டபம்

📖 விளக்கம்: பெருந்தலைவர் என்றும் கருப்பு காந்தி என்றும் புகழப்பட்ட விடுதலைப் போராட்ட வீரரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான காமராஜர் நினைவாக கட்டப்பட்டது. இந்த நினைவு மண்டபம் அவர் தமிழகத்தின் மிக நேர்மையான எளிய அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியின் கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழகத்தின் பல முன்னோடி திட்டங்களான அனைவருக்கும் கல்வி மற்றும் இலவச சத்துணவு திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியவர். அவரது மறைவுக்கு பின் அவரது அஸ்தி கன்னியாகுமரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அந்த இடத்தில் கட்டப்படடது காமராஜர் நினைவு மண்டபம். இந்த மண்டபத்தில் அவரது வாழ்வில் நிகழ்ந்த பல அரிய சம்பவங்கள் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன. இங்கு ஒரு நூலகமும் உள்ளது. காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை.

🕒 நேரம்: 7:00 a.m. to 7:00 p.m.

📞 அவசர தொடர்பு எண்கள்

  • காவல்: 100
  • தீயணைப்பு: 101
  • ஆம்புலன்ஸ்: 108
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
  • உள்ளாட்சி நிர்வாகம்: கன்னியாகுமரி நகராட்சி (04652-246279)
  • சுற்றுலா துறை: 9176995866

📍 வழியைப் பெறுங்கள்:

🚌 பேருந்து விவரங்கள்

Bus TerminalRoute No.Via
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்1,2,303அண்ணா பேருந்து நிலையம்,கோட்டார்,சுசீந்திரம்,கொட்டாரம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்1,2,303சுசீந்திரம், கொட்டாரம்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்303தக்கலை, நாகர்கோவில்
களியக்காவிளை பேருந்து நிலையம்303தக்கலை, நாகர்கோவில்

📷 பட தொகுப்பு