மாவட்ட கிராம மேம்பாட்டு நிறுவனம் இந்திய மற்றும் மாநில அரசுகளின் வறுமைக்கு எதிரான பல்வேறு திட்டங்களை மாவட்ட அளவில் அமல்படுத்துவதில் ஊரக வளா்ச்சி முகமையானது முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஊரக வளா்ச்சி முகமையானது வறுமைக்கு எதிரான திட்டங்களை அமல் படுத்துவதிலும் கிராமப்புற மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவதிலும் ஊரகவளா்ச்சி முகமையானது தனித்துவம்மிக்க மற்றும் தொழில்முறை சார்ந்த நிறுவனமாக பார்க்கப்படுகிறது. இது கிராமப்புற கட்டமைப்பை வலுப்படுத்தவும் கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பின் தங்கிய மற்றும் ஏழ்மையை ஒழிக்கவும் தூண்டுகோலாக அமைகிறது. ஊரகவளா்ச்சி முகமையானது கிராமப்புற மக்களின் திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை உயா்த்தவும் வறுமையை ஒழிக்கவும் நோக்கத்தோடு பலதிட்டங்களை அமல்படுத்துகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களையவும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஊரகவளா்ச்சி முகமையானது 1980 இல் நிறுவப்பட்ட தமிழக கூட்டுறவு சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட சங்கம். மாவட்ட ஆட்சியா் ஊரகவளா்ச்சி முகமை தலைவராவார். ஊரக வளா்ச்சி முகமையின் நிறுவாகத்தை ஆட்சிக்குழு நிருவகிக்கிறது. திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை ஆட்சிக்குழு செய்கிறது. மற்றும் அதன் கட்டுப்பாடு, கண்காணிப்பு போன்றவற்றையும் நிருவகிக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஊரக வளா்ச்சி முகமை ஆட்சிக்குழுவின் கூட்டமானது நடத்தப்படுகிறது.
ஊரக வளா்ச்சி் முகமையின் நிருவாகச் செலவு ” ஊரகவளா்ச்சி முகமை நிருவாகம் தலைபை்பின்கீழ் 75 – 25 என்ற விகிதாச்சார முறைப்படி மாநில , மத்திய அரசினால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.வாடகை, பி.ஓ.எல், அலுவலகச் செலவினங்களுக்காக அதிகபட்சமாக சம்பளச்செலவில் 30 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பி பிரிவின்கீழ் வருகிறது. ஒரு வருடத்திற்கு ரூ. 10000000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தின் காரணமாக ஒருங்கிணைந்த அடிப்படையில் 5 சதவிகிதம் உச்ச வரம்பு அதிகரிக்கப்படுகிறது.
- அம்மா உடற்பயிற்சி கூடம் (127KB)
- அம்மா பூங்கா (124KB)
- ஒருங்கிணைத்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பட்டு திட்டம் (CSIDS) (267KB)
- முதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் (148KB)
- பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டம் (177KB)
- சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு திட்டம் (209KB)
- தன்னிறைவு திட்டம் (78.6KB)
- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (357KB)
- தேசிய கரிம வாயு மற்றும் உர மேலாண்மை திட்டம் (866KB
- தாய் திட்டம் (THAI ) (59.3KB)
நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது – 2022-2023
-
பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் – 2022-2023
-
ஆதி திராவிடர் குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டம் – 2022-2023