மூடுக

அருள்மிகு ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம்

அருள்மிகு ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம்

📖 விளக்கம்: ஞான அரண்யம் என அழைக்கப்படும் சுசீந்திரம் கன்னியாகுமரியிலிருந்து 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள யாத்திரிக தளம் ஆகும். இந்த கோயிலில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவை ஒருங்கே கொண்டுள்ள தாணுமாலயன் சுவாமி ஆகும். இங்கு லிங்கம் மூன்று பகுதியாக உள்ளது. மேல் பகுதி தாணு என்னும் சிவன் பேரிலும் நடுப்பகுதி மால் என்னும் விஷ்ணு பேரிலும் கடைப்பகுதி அயன் என்னும் பிரம்மன் பேரிலும் அமைந்துள்ளது. இங்கு தாணுமாலயன், ஆத்ரி என்னும் முனிவரும் அவரது மனைவி அனுசுயா என்பவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது. இங்கு விக்னேஷ்வரி (விநாயகரின் பெண் உருவம்), இந்திர விநாயகர் மற்றும் கால பைரவரின் உருவங்கள் காணப்படுகிறது. இங்கு 9ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகிறது. இந்த கோயிலில் 34 அடி உயர கோபுரம் வெகுதூரத்தில் இருந்தே காட்சியளிக்கிறது. மேற்கூரையில் நவகிரகங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு குரு தட்ஷிணாமூர்த்தி கோவிலும் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் சேர வாசல் சாஸ்தா, ராமர் மற்றும் முருகருக்கு கோவில்கள் உள்ளன. இங்கு ராமர் கோவிலுக்கு எதிரில் 5.5மீ உயரத்தில் அசோக வனத்தில் சீதைக்கு விஸ்வரூப வடிவில் காட்சியளித்த ஆஞ்சநேயர் சித்தரிக்கப்பட்டுள்ளார். வலது பக்க கூடத்தில் ஒரே கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட 4 இசைத் தூண்கள் உள்ளன. திருக்கோயில் திறக்கப்படும் நேரம் காலை 4.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

🕒 நேரம்: 4:30 a.m. to 11:30 a.m & 5:00 p.m. to 08:30 p.m

📞 அவசர தொடர்பு எண்கள்

  • காவல்: 100
  • தீயணைப்பு: 101
  • ஆம்புலன்ஸ்: 108
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
  • உள்ளாட்சி நிர்வாகம்: சுசீந்திரம் பேரூராட்சி (04652-241399)
  • சுற்றுலா துறை: 9176995866

📍 வழியைப் பெறுங்கள்:

🚌 பேருந்து விவரங்கள்

Bus TerminalRoute No.Via
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்1,2,3,303அண்ணா பேருந்து நிலையம், சுசீந்திரம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்1,2,3, 303கோட்டார், சுசீந்திரம்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்1,2,303. 349, 350கோட்டார், சுசீந்திரம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்303தக்கலை, நாகர்கோவில்
களியக்காவிளை பேருந்து நிலையம்303மார்த்தாண்டம்,தக்கலை, நாகர்கோவில்

📷 பட தொகுப்பு

×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051797.jpg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051797.jpg"]; let currentIndex = 0; function openModal(i) { currentIndex = i; document.getElementById('modalImage').src = images[i]; document.getElementById('imageModal').style.display = 'flex'; } function closeModal() { document.getElementById('imageModal').style.display = 'none'; } function nextImage() { currentIndex = (currentIndex + 1) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function prevImage() { currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function getLocationAndRedirect() { if (navigator.geolocation) { navigator.geolocation.getCurrentPosition(function(position) { const lat = position.coords.latitude; const lon = position.coords.longitude; const url = "https://www.google.com/maps/dir/?api=1&origin=" + lat + "," + lon + "&destination=encodeURIComponentSuchindram Shree Thanumalayan Swamy Temple, N Car St, Vivekananda Junction, Suchindram, Tamil Nadu 629704"; window.location.href = url; }, function() { alert('Could not get location'); }); } } window.onload = function() { document.getElementById('mapBtn').addEventListener('click', getLocationAndRedirect); document.getElementById('img0').addEventListener('click', function() { openModal(0); }); document.getElementById('img1').addEventListener('click', function() { openModal(1); }); }