மின்னாளுமை

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை(ICT) பயன்படுத்தி,தகவல் பரிமாற்றம், நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை முறைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

தேசிய மின்னாளுமை திட்டம்: (NeGP)

மின்னனு ஊடகங்கள் வழியாக எல்லா அரசு சேவைகளையும் அளிப்பதற்கான மத்திய அரசின் முன்னெடுப்பாக தேசிய மின்னாளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம்(2003-2007)வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க ,தேவையான கட்டுமானங்களையும் , கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல, கொள்கை முனைப்பு திட்டங்களை  (Mission Mode Project) நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்னாளுமை திட்ட பார்வை :

பொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.

மின்னாளுமை மாவட்ட திட்டம் :

மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.01.2012 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 02.11.2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.

தாலுகா வாரியாக பொது சேவை மையங்கள்

  1. அகஸ்தீஸ்வரம் வட்டம்  (324 KB)
  2. தோவாளை வட்டம்  (335 KB)
  3. கல்குளம் வட்டம்  (350KB)
  4. விளவன்கோடு வட்டம்  (174KB)
  5. திருவட்டார் வட்டம் (153KB)
  6. கிள்ளியூர் வட்டம் (180KB)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் :

 வ.எண்

சேவை நிறுவனம்

மையங்களின் எண்ணிக்கை

முனையங்களின்

எண்ணிக்கை

1 அரசு கேபிள் தொலைக்காட்சி 9 14
2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 140 142
3 கிராம வறுமை ஒழிப்பு சங்கம். 9 9
4 சுனாமிக்குப்பின் நிலைத்த வாழ்வாதார திட்டம். 7 7
5 கிராமப்புற தொழில் முனைவோர் 26 26
மொத்தம் 191 198

மின்னாளுமை மாவட்ட சேவைகள்:

  • மின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் 01-06-2013 முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருவாய் துறையின் கீழ் 20  சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன
  1. சாதிச்சான்றிதழ்
  2. இருப்பிட சான்றிதழ்
  3. வருமானச் சான்றிதழ்
  4. முதல் பட்டதாரி சான்றிதழ்
  5. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்
  6. விவசாய வருமான சான்றிதழ்
  7. வாரிசு சான்றிதழ்
  8. குடிபெயர்வு சான்றிதழ்
  9. சிறு குறு விவசாயி சான்றிதழ்
  10. வசிப்பிட சான்றிதழ்
  11. ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
  12. கலப்பு திருமண சான்றிதழ்
  13. சொத்து மதிப்பு சான்றிதழ்
  14. திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்
  15. விதவை சான்றிதழ்
  16. அடகு வணிகர் உரிமம்
  17. இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்
  18. வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்
  19. கடன் கொடுப்போர் உரிமம்
  20. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ்
  • மின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறைசேவைகள் 15-08-2013 முதல் 4 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.
  1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
  2. அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்
  3. ஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்
  4. தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்
  5. டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
  6. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I
  7. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II
    • இணைய வழி பட்டா மாறுதல் 21-01-2016 முதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
    • தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
    • தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)
    • தமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)

மின் ஆளுமை சேவைக் கட்டணம்:

வ.எண் துரையின் பெயர் சேவையின் பெயர் சேவைக் கட்டணம்  சேவை வரி உட்பட (ரூ.)
1 வருவாய்த் துறை சாதி சான்றிதழ் 60
2 வருவாய்த் துறை பிறப்பிட சான்றிதழ் 60
3 வருவாய்த் துறை வருமான சான்றிதழ் 60
4 வருவாய்த் துறை முதல் பட்டதாரி சான்றிதழ் 60
5 வருவாய்த் துறை கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் 60
6 வருவாய்த் துறை தமிழ்நிலம்  – முழு புல பட்டா மாறுதல் 60
7 வருவாய்த் துறை தமிழ்நிலம் – கூட்டு பட்டா மாறுதல் 60
8 வருவாய்த் துறை தமிழ்நிலம் – உட்பிரிவு 60
9 வருவாய்த் துறை தமிழ்நிலம் – அ-பதிவேடு பெறுதல் 25
10 வருவாய்த் துறை தமிழ்நிலம் – சிட்டா பெறுதல் 25
11 சமூகநலத்துறை அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம் 120
12 சமூகநலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – I 120
13 சமூகநலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II 120
14 சமூகநலத்துறை தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் 120
15 சமூகநலத்துறை டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் 120
16 சமூகநலத்துறை ஈ.வெ.ரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம் 120
17 சமூகநலத்துறை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் 120
18 காவல் துறை CSR நிலை 15
19 காவல் துறை FIR நிலை 15
20 காவல் துறை ஆன்லைன் புகார் பதிவு செய்தல் 25
21 காவல் துறை நிலையைப் பார்க்க 15
22 காவல் துறை வாகன நிலை தேடல் 15
23 வருவாய்த் துறை விவசாய வருமான சான்றிதழ் 60
24 வருவாய்த் துறை குடிபெயர்வு சான்றிதழ் 60
25 வருவாய்த் துறை வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் 60
26 வருவாய்த் துறை விதவை சான்றிதழ் 60
27 வருவாய்த் துறை இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் 60
28 வருவாய்த் துறை கலப்பு திருமண சான்றிதழ் 60
29 வருவாய்த் துறை வாரிசு சான்றிதழ் 60
30 வருவாய்த் துறை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் 60
31 வருவாய்த் துறை வசிப்பிட சான்றிதழ் 60
32 வருவாய்த் துறை சிறு குறு விவசாயி சான்றிதழ் 60
33 வருவாய்த் துறை சொத்து மதிப்பு சான்றிதழ் 60
34 வருவாய்த் துறை ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் 60
35 வருவாய்த் துறை திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் 60
36 வருவாய்த் துறை அடகு வணிகர் உரிமம் 60
37 வருவாய்த் துறை கடன் கொடுப்போர் உரிமம் 60
38 மின்சார வாரியம் (TANGEDCO) மின் உபயோக கட்டணம்
1000 வரை 15
1001 – 3000 25
3001 – 5000 40
5001 – 10000 50
10001 மேல் 60
39 த.ந.இ.சே. தமிழ்நாடு பொறியியல் சேர்கை
பொது.ரூ500 60
பி.வ-தா.வ – தா.ப –ரூ250 60
40 தீயனைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 120
தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி 120
பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 120
தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 120
41 பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை 60
குடும்ப அட்டை திருத்தம் 60
குடும்ப அட்டை அச்சிட 60

முக்கிய இணைப்புகள்:

பொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:

https://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதல்களுக்கான விண்ணப்ப நிலை.

https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html – திட்டங்களுக்கான விண்ணப்ப நிலை

https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு

 

பொது இ சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:

https://edistricts.tn.gov.in:8443/certificates_csc – மின் ஆளுமை -பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்

https://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்

https://edistricts.tn.gov.in/csc_reports/login.jsp – பொது இ-சேவை மைய அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்

http://tamilnilam.tn.gov.in/CSC – தமிழ்நிலம்- பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்

 

துறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:

https://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்

http://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இசேவை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்

https://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்

http://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்.

https://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp -சமூக நலத்துறை- திருமணத் நிதிஉதவி திட்டம்  – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.

http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp-சமூகநலத்துறை-குழந்தை பாதுகாப்புப் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.