மூடுக

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம்,ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரிவுகள்

வரிசை எண்

பிரிவுகள்

விபரம்

1 பிரிவு – அ பணியாளர் அமைப்பு மற்றும் அலுவலக நடைமுறை
2 பிரிவு – ஆ பட்ஜெட் , தணிக்கை, ஊதிய நிர்ணயம் , ஊதிய பட்டியல் தயாரித்தல் , தேர்வுகள்
3 பிரிவு – சி சட்டம் மற்றும் ஒழுங்கு , குற்றவியல் (நீதிமன்றம் – சட்டம்) தொடர்பானவை
4 பிரிவு – உ நிலம் கையகப்படுத்துதல், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள்
5 பிரிவு – ஊ பொது விநியோக திட்டம் , குடிமைப்பொருள் வழங்கல்
6 பிரிவு – ஜி பதிவறை பராமரிப்பு, அரசு அலுவலகங்கள் ஒதுக்கீடு மற்றும் மாவட்ட அரசிதழ்
7 பிரிவு – ஹெச் இயற்கை இடர்பாடுகள்
8 பிரிவு – ஐ இலங்கை அகதிகள் மறுவாழ்வு
9 பிரிவு – ஜே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
10 பிரிவு – கே சுத்த நகல், தபால் அனுப்புகை
11 பிரிவு – ச வழக்குகள், நீதிமன்ற வழக்குகள்
12 பிரிவு – எம் நிலம் , பட்டா மாறுதல்
13 பிரிவு – ஓ குறை தீர்க்கும் நாள் கூட்டம், மனு நீதி நாள், ஜமாபந்தி
14 பிரிவு – ஆர் மாநில கலால், டாஸ்மாக் மேலாண்மை
15 பிரிவு – இசட் தேர்தல்
16 பிரிவு – ர மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலம்
17 பிரிவு – உ.இ.(ஊராட்சிகள்) ஊராட்சிகள் தொடர்பான நடவடிக்கைகள்
18 பிரிவு – உ.இ.(தணிக்கை) தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு
19 பிரிவு – நே.மு.உ.(சிறுசேமிப்பு) சிறுசேமிப்பு
20 பிரிவு – நே.மு.உ.(சத்துணவு) பள்ளிகள் மதிய உணவு திட்டம் தொடர்பான நடவடிக்கைகள்
21 பிரிவு – தி.இ.(ஊ.வ.மு.) ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
22 பிரிவு – உ.இ.(பேரூராட்சிகள்) பேரூராட்சிகள் தொடர்பான நடவடிக்கைகள்

மாவட்ட ஆட்சியாளா்களின் பெயா் பட்டியல் (*பொறுப்பு ஆட்சியா்கள் )

வ.எண்
மாவட்ட ஆட்சியரின் பெயா்
ஆரம்பம்
முடிவு
50 திரு.பிரசாந்த் மு.வடநேரே இ.ஆ.ப. 23-02-2018 28-10-2020
49 திரு.சஜ்ஜன்சிங் ரா.சவாண் இ.ஆ.ப. 24-09-2014 23-02-2018
48 திரு.எஸ். நாகராஜன் இ.ஆ.ப. 20-01-2012 23-09-2014
47 திருமதி.எஸ்.மதுமதி இ.ஆ.ப. 03-08-2011 09-01-2012
46 திரு.ஆஷிஸ் குமார் இ.ஆ.ப. 07-06-2011 27-07-2011
45 திரு.ராஜேந்திர ரத்னு இ.ஆ.ப. 05-06-2009 05-06-2011
44 டாக்டா். ராஜேந்திரக்குமார் இ.ஆ.ப. 10-11-2008 04-06-2009
43 திருமதி. பி.ஜோதி நிர்மலா இ.ஆ.ப. 25-02-2008 10-11-2008
42 திரு.கீசுஞ்சோநகம் ஜதக்சுரு இ.ஆ.ப. 08-10-2007 24-02-2008
41 திரு.தேவராஜ்தேவ் இ.ஆ.ப. 11-06-2007 08-10-2007
40 திருமதி.பி.ஜோதி நிர்மலா இ.ஆ.ப.* 26-04-2007 10-06-2007
39 டாக்டா். எஸ். சொர்னா இ.ஆ.ப. 12-02-2007 26-04-2007
38 திரு.சுனில்பாலிவால் இ.ஆ.ப. 08-01-2005 12-02-2007
37 திரு.ரமேஷ்சந்த் மீனா இ.ஆ.ப. 26-11-2004 08-01-2005
36 திரு.ராஜேஷ் லகானி இ.ஆ.ப. 16-07-2003 21-11-2004
35 திரு.ககன்தீஷ்சிங் பேடி இ.ஆ.ப. 11-06-2001 15-07-2003
34 திரு.கே.பாலசந்திரன் இ.ஆ.ப. 26-02-2001 05-06-2001
33 திரு.ரமேஷ்சந்த் மீனா இ.ஆ.ப. 24-04-2000 03-02-2001
32 திரு.பாண்டியன் இ.ஆ.ப. 18-05-1998 23-04-2000
31 திரு. விஷ்வநாத் செகாவத்கா் இ.ஆ.ப. 01-06-1996 11-05-1998
30 திரு.ஏ.பன்னீா்செல்வம் இ.ஆ.ப. 27-10-1995 31-05-1996
29 திரு.ஆா். இராஜகோபால் இ.ஆ.ப. 31-10-1994 26-10-1995
28 திரு.அம்புஜ்சா்மா இ.ஆ.ப. 21-05-1993 25-09-1994
27 திரு.ராஜீவ்நயன் சவுபே இ.ஆ.ப. 24-02-1991 20-05-1993
26 திரு.எம்.கோபாலகிருஷ்ணா இ.ஆ.ப. 19-10-1989 23-02-1991
25 திரு.என். சுந்தரதேவன் இ.ஆ.ப. 10-03-1988 11-10-1989
24 திரு.சையத் முனிர் கோதா இ.ஆ.ப. 20-09-1985 13-02-1988
23 திரு.கருப்பையா இ.ஆ.ப. 22-08-1984 19-09-1985
22 திரு.எல்.கே. திரிப்பாதி இ.ஆ.ப. 20-03-1983 21-08-1984
21 திரு.எம்.பி. பிரனேஷ் இ.ஆ.ப. 14-03-1982 19-03-1983
20 திரு.ஜே.டி. ஆச்சாரியலு இ.ஆ.ப. 28-05-1981 13-03-1982
19 திரு.ஏ.அப்துல் அசிஸ் இ.ஆ.ப. 14-02-1980 26-05-1981
18 திரு.துரை சுந்தரேசன் இ.ஆ.ப. 03-05-1979 13-02-1980
17 திரு.எம்.கே. பாலசுப்பிரமணியன் இ.ஆ.ப. 10-05-1978 03-05-1979
16 திரு.வி.சங்கர சுப்பையன் இ.ஆ.ப. 24-05-1976 03-05-1978
15 திரு.வி.டி.துரைராஜ் இ.ஆ.ப. 12-02-1975 24-05-1976
14 திரு.சி.தங்கராஜா இ.ஆ.ப. 24-04-1974 12-02-1975
13 திரு.ஆா்.சுவாமிநாதன் இ.ஆ.ப. 22-08-1973 05-041974
12 திரு.ஏ.பி. முத்துசுவாமி இ.ஆ.ப. 24-04-1971 22-08-1973
11 திரு.கே.எஸ்.ராமகிருஷ்ணன் இ.ஆ.ப. 07-03-1970 22-04-1971
10 திரு.ஆா்.ஏ.சீதாரம்தாஸ் இ.ஆ.ப. 12-10-1968 14-02-1970
9 திரு.சி.என். ராகவன் இ.ஆ.ப. 22-08-1967 09-09-1968
8 திரு.பி.வி.கிருஷ்ணசுவாமி இ.ஆ.ப. 27-04-1965 21-08-1967
7 திரு.வி.கே.சி. நடராஜன் இ.ஆ.ப. 04-08-1964 26-04-1965
6 திரு.கே.ஜே.எம்.ஷெட்டி இ.ஆ.ப. 19-08-1963 03-08-1964
5 திரு.சி.வி.எஸ். மணி இ.ஆ.ப. 28-02-1963 25-07-1963
4 திரு.எஸ்.கிறிஸ்ணாஸ்வரி இ.ஆ.ப. 15-12-1962 14-02-1963
3 திரு.ஏ.எஸ்.வெங்கட்ராமன் இ.ஆ.ப. 19-06-1962 14-12-1962
2 திரு.ஜே.ஏ. அம்பாசங்கா் இ.ஆ.ப. 02-12-1958 17-05-1962
1 திரு.ஆா்.திருமலை இ.ஆ.ப. 01-11-1956 01-12-1958