மூடுக

கால்நடை பராமரிப்புத் துறை

கால்நடை பராமரிப்புத் துறை, கன்னியாகுமரி (இ) நாகர்கோவில்

கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரமும் கால்நடை வளர்ப்பும் நெருங்கிய உறவுடையதாக அமைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. 50 விழுக்காட்டிற்கும் அதிகமான கிராமப்புற சிறு, குறு, பெரிய விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு கால்நடை வளர்ப்பு அதிக வேலைவாய்ப்பு தந்து வருமானத்தை இருமடங்காக்கும் ஒரு நல்ல தொழிலாக காணப்படுகிறது. கால்நடைகள், இறைச்சி, பால்பொருட்கள், உரம், பாரம் தூக்க, வண்டி இழுக்க மற்றும் பல நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன.

கீழ்காணும் சிறப்பு திட்டங்கள் கால்நடை உற்பத்தி மேம்பாட்டிற்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 1. விலையில்லா வெள்ளாடுகள் / கறவை மாடுகள் வழங்கும் திட்டம்.
 2. கோழி வளர்ப்பு மேம்பாட்டு திட்டம்
 3. நோய் கட்டுப்படுத்தும் திட்டம்
 4. மாநில தீவன அபிவிருத்தி திட்டம்
 5. ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம்&
 6. கால்நடை பாதுகாப்பு திட்டம்
 7. சிறிய அளவிலான பால்பண்ணை அமைக்கும் திட்டம்

விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்

 1. விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்: நமது மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
 2. விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம
அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம்

நமது மாநிலத்தில் உள்ள ஏழைகளின் ஏழையாகிய பரம ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாண்புமிகு முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட திட்டம் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 4 வெள்ளாடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த 5 வருடங்களில் சுமார் 7 இலட்சம் கிராமபுற நிலமில்லா விவசாயக் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

 1. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பரம ஏழைகள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள்.
 2. மகளிர் (பெண்கள்) மட்டும் தான் பயனாளிகளாக இருக்க வேண்டும்.
 3. பயனாளிகள் அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
 4. பயனாளிகள் கண்டிப்பாக நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்களாக இருக்க வேண்டும்.
 5. பயனாளிகள் 18 வயது முதல் 58 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
 6. மேலும் பயனாளிகள் குடும்பத்தில் குறைந்த பட்சம் ஒருத்தர் 18 வயது முதல் 60 வயதிற்குள் இருந்திட வேண்டும்
 7. பயனளிகளிடம் தற்பொழுது பசு, செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் சொந்தமாக இருக்க கூடாது.
 8. பயனாளிகளோ அல்லது அவர்கள் உறவினர்களோ (கணவா, தந்தை, தாய், மாமனார், மகன், மகள், மருமகள், மருமகள் ஆகியோர்) மத்திய மற்றும் மாநில அரசிலோ அல்லது மத்திய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு மையங்களிலோ பணியிலிருக்க கூடாது அல்லது உள்ளுர் அமைப்புகளில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
 9. பயனாளிகளில் குறைந்த பட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களாக இருக்க வேண்டும்.
 10. மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 11. திருநங்கைகள் அந்த கிராமத்தில் வசிப்பவர்களாக இருந்து மேற்கண்ட தகுதிகள் இருந்தால் அவர்களும் தகுதியுடையவர்களாக கருதப்படுவர்.
 12. ஒரு வீட்டிற்கு நான்கு ஆடுகள் வழங்கப்படும் (1+3)
 13. பயனாளிகள் தேர்விற்காக சிறப்பு கிராமசபா கூட்டங்கள் நடத்தப்படும், விண்ணப்பங்களை கிராம அளவிலான குழு உறுப்பினாகளிடமோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ அளிக்கலாம்.

நோய் கட்டுப்படுத்தும் திட்டங்கள்

“ஒரு நாட்டின் பெருமை அதன் கால்நடை நலத்தை வைத்தே நிர்ணயக்கப்பட வேண்டும்” என காந்தியடிகள் கூறியுள்ளார். கால்நடைகள் நலன் ஒரு நாட்டிற்கு முகுகெலும்பு போன்றதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடைகள் நலம் பேணுவதற்காக நோய்கள் வராமல் தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகின்றது. நோய் தாக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு ஆந்த்ராக்ஸ், கால் நோய் மற்றும் வாய் நோய், ஆட்டுக்கொல்லி போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் போடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கால் நோய் மற்றும் வாய் நோய்க்கான தடுப்பூசி மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மாநிலம் முழுவதும் போடப்படுகிறது. பசுக்களில் 50% மேல் வெளிநாட்டு கலப்புள்ள மாடுகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் இந்நோயின் பாதிப்புக்குள்ளாகின்றன.

நோய் கிளர்ச்சியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

 • நோய் கிளர்ச்சி கண்டறியப்பட்ட உடன் கால்நடை உதவி மருத்துவர் மற்றும் கால்நடை ஆய்வாளர் கொண்ட தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 • உயிர்ப்பாதுகாப்பு முறைகளான கிருமி நாசினி தெளித்தல், தொற்று நோய்க்கிருமி தாக்கத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 • தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் வழியாக கள ஆய்வு
  மேற்கொள்ளப்படுகிறது.
 • தேவையான அவசர மருந்துகளை வெளியிலிருந்து வாங்கி பயன்படுத்த
  மண்டல இணை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 • பொதுவாக கால்நடைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க B Complex injection மற்றும் தாது உப்புக்கள் இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படுகிறது.
 • மாவட்ட நிர்வாகம் வழியாக சிறப்பு கிராம சபாக்கள் நடத்தப்பட்டு விவசாய பண்ணையாளர்களுக்கு கால்நடை நோய் தாக்கும் அறிகுறிகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் அதில் தடுப்பூசியின் முக்கியத்துவம் முதலியன எடுத்துக்கூறப்படுகிறது
 • கால் நோய் மற்றும் வாய் நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தில் மாநில அரசு, மத்திய அரசு பங்களிப்புடன் வருடந்தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 100% அனைத்து தகுதியான கால்நடைகளுக்கும் கால் நோய் மற்றும் வாய்நோய் தடுப்பூசி போடப்படுகிறது.
 • 100% கால்நடைகளுக்கு தடுப்பூசிப்பணி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் கடைபிடிக்கும் செயல்திட்ட வரைவுகளாவன
   • மாநிலம் முழுமையும் உள்ள அனைத்து தகுதியான கால்நடைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதே முதன்மை நோக்கமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
   • கிராமங்கள்/ குக்கிராமங்கள் அளவில் தடுப்பூசி குழுக்கள் சென்று
    தடுப்பூசி மேற்கொள்ள உறுதி செய்யப்பட்டுள்ளது.
   • கால்நடை வளர்ப்போரிடம் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு ஊடகங்கள்வழி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம்:

மனிதனுக்கு தேவையான புரதச்சத்து கோழி இறைச்சி அதிகம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் புர்த்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலும் இறைச்சி கோழிகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. மேலும் தற்பொழுது நாட்டுக்கோழி வளர்ப்பு அதற்கு மாற்றாக செயல்பட தொடங்கியுள்ளது. மனிதனுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குவதுடன் இத்திட்டம் கிராமப்புற பெண்களின் அன்றாடச் செலவுகளை சந்திக்கவும் உதவுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண் பயனாளிகளுக்கும் 20 குஞ்சுகள் கூண்டுகளுடன் இலவசமாக வழங்கப்படுகிறது. அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களின் மூலம் சுகாதாரத்துடன் கூடிய கோழிவளர்ப்பு பற்றிய பயிற்சி நடத்தப்படுகிறது. இத்திட்டம் கிராமப்புற பெண்களின் வருவாயை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம் 2017-2018

இலக்கு-தாழ்த்தப் பட்ட / பழங்குடியினர் இலக்கு-இதர இலக்கு-மொத்தம் சாதனை தாழ்த்தப் பட்ட / பழங்குடியினர் சாதனை இதர சாதனை மொத்தம் நிதி இலக்கு நிதி சாதனைt கொள்முதல் செய்யப்பட்ட கூண்டுகள் எண்ணிக்கை கொடுக்கப் பட்ட குஞ்சுகளின் எண்ணிக்கை
100 510 610 110 500 610 1525000 1525000 610 610 பயனாளிகள் 12200 குஞ்சுகள்

 

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம்

இறைச்சி கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை அனைத்து மாவட்டங்களும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதலமைச்சரால் நமது மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ”சிறப்பு கோழி வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம்”. இத்திட்டத்தின் கீழ் நாட்டின கோழிகள் வளர்த்து பராமிப்பதற்கு விவசாய மக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் அரசால் வழங்கப்படுகிறது.
சிறிய கோழிப்பண்ணை 500 கோழிகள் வரை வாங்கி வளாப்பதற்கு 25% முன்மானியத்துடன் 2016-2017 மற்றும் 2017-2018 ஆண்டுகளில் 100 அலகுகள் நமது மாவட்டத்திற்கு அரசால் குறியீடு நிர்ணயிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாநில தீவன அபிவிருத்தி திட்டம்

பசுந்தீவனங்கள் உற்பத்தி கால்நடைகளின் தீவனச் செலவினை அதிக அளவில் மிச்சப்படுத்துவதோடு கால்நடைகளுக்கு இன்றியமையாத உயிர்ச்சத்து மற்றும் தாதுஉப்புகளையும் வழங்குகின்றது. இச்சத்துக்கள் கால்நடைகளில் சினைப் பிடிப்பு சதவீதத்தை அதிகப்படுத்தி வருடம் ஒரு கன்று என்ற நிலையை எய்துவதற்கு அடிப்படையாக அமைகின்றது. இதனை உறுதிப்படுத்தும் பொருட்டு நமது அரசு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல் படுத்தி வருகின்றது.
இத்திட்டத்தில் பசுந்தீவன வளர்ப்பு பல்வேறு பிரிவுகளாக தீவன மரம் வளர்ப்பு, பாசன வசதியுடன் கூடிய தீவன புல் வளர்ப்பு, மானாவாரி தீவன புல் வளர்ப்பு, மண்ணில்லா தீவன வளர்ப்பு, அசோலா போன்ற வழிகளில் செயல்படுத்தப்படுகிறது.

மாநில தீவன அபிவிருத்தி திட்டம் 2017-18

வ எண் விபரம் மாவட்ட இலக்கு சாதனை
1 நீர்ப்பாசன நிலையில் விவசாயிகள் நிலத்தில் அதிக விளைச்சல் பெறும் வற்றாத தீவனம் பயிரிடுதல் (ஏக்கரில் 50 ஏக்கர் 50 ஏக்கர்
2 மானாவரி நிலையின் கீழ் விவசாயிகள் நிலத்தில் சோளம் மற்றும் மாடுகளின் தீவனம் பயிhpடுதல் (ஏக்கரில் 100 ஏக்கர் 100 ஏக்கர்
3 பசுமையான தீவன உற்பத்திக்கு உறட்ரொபோனிக் தொழில்நுட்பம் 20 அலகுகள் 20 அலகுகள்
4 அசோலா அலகுகள் உருவாக்குதல்

கால்நடை பாதுகாப்புத் திட்டம்:

அன்றாடம் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் பிறநல பணிகள் மேற்கொள்ளப்படுவது தவிர தொலை தூரத்தில் உள்ள கால்நடைகளுக்காக நலமுகாம்கள் கால்நடை பராமரிப்புத் துறையால் நடத்தப்படுகிறது. கால்நடைகள் இருக்கும் இடங்களிலேயே அவைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச திட்டமே கால்நடை பாதுகாப்புத் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின்கீழ் குக்கிராமங்கள் அளவில் கால்நடை நல முகாம்கள் நடத்தப்படுகின்றன. முகாம் முறையான அறிவிப்பு மற்றும் விளம்பரங்களுடன் நடத்தப்பட்டு அதில் கால்நடை நலப்பணிக்கான செயற்கைமுறை கருவுட்டல், சிகிச்சை, குடற்புழு நீக்கம் முதலிய பணிகள் மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் அறுவை, ஈனியல், மலட்டுத்தன்மை முதலிய பிரிவில் தேவைப்படும் சிறப்பு சிகிச்சைக்கான கால்நடைகள் கண்டறியப்பட்டு அவை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது.

2017-2018-ல் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை :

பங்கெடுத்த கால்நடைகளின் எண்ணிக்கை

முகாம்களின் எண்ணிக்கை கால்நடை எருமை வெள்ளாடு செம்மறி ஆடு கோழிகள் இதர கால்நடைகள் மொத்தம் பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை
126 12687 174 16557 289 47524 3937 81168 8270