ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்

ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், ஊரக மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் 100% மானியத்தில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு கறவை மாடு, 2 ஆண்டுகளுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்து மற்றும் உடனடி தீவனச் செலவிற்காக ரூ.3,000/- வழங்கப்படும்.

இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட மகளிர் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநங்கைகள். மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களை கொண்ட மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் செயல்படும் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இணையதளம்: https://tnahschemes.tn.gov.in

 

27/11/2026 17/12/2026 பார்க்க (209 KB)