மூடுக

மணக்குடி காயல்

மணக்குடி காயல்

🕒 நேரம்:

📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.

🚌 பேருந்து விவரங்கள்

பேருந்து நிலையம்பேருந்து எண்.வழி
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்2J, 2Lஅண்ணா பேருந்து நிலையம், பறக்கை
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்37 Sectorகோட்டார், பறக்கை
கன்னியாகுமரி பேருந்து நிலையம்2, 2J, 2K 302கோவளம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்
களியக்காவிளை பேருந்து நிலையம்

📖 விளக்கம்:

மணக்குடி கன்னியாகுமரியில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மணக்குடி முகத்துவாரம் கடலுக்கும் பழையாற்றிற்கும் இடையே இயற்கையான இணைப்பை உருவாக்குகிறது. முகத்துவாரத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கும் அதே வேளையில், பருவமழையின் விளைவாக ஆற்றில் அதிக நீர் பாய்ச்சல் ஏற்படுகிறது, இது முகத்துவாரத்திற்குள் சென்று நீர்மட்டத்தை உயர்த்துகிறது. சுசீந்திரம் - தேரூர் பறவைகள் பாதுகாப்பு காப்பகத்தில் 90க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன. கிரேப்ஸ், பெலிகன்ஸ், கார்மோரண்ட்ஸ், டார்டர், எக்ரெட்ஸ் மற்றும் ஹெரான்ஸ், ஸ்டோர்க்ஸ், ‡பிளமிங்கோ, வாத்துகள், பருந்துகள் மற்றும் கழுகுகள், ஓஸ்ப்ரே, ரெயில்ஸ் மற்றும் கூட், பிளவர்ஸ், ஸ்டில்ட், கிங்‡பிஷர்ஸ், வாக்டெயில்ஸ் போன்றவை இதில் அடங்கும். சுசீந்திரம்-தேரூர் பறவைகள் பாதுகாப்பு ஒரு தனித்துவமான வெப்பமண்டல காப்பகம். தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர் மற்றும் முகத்துவாரங்கள் ஈரநில வளாகம். ஒரு சதுப்பு நிலத்தை „சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலமாக… அறிவிப்பதற்கு ராம்சார் மாநாட்டின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஏழு அளவுகோல்களை இது பூர்த்தி செய்கிறது. சுசீந்திரம்-தேரூர் பல்லுயிர் பாதுகாப்பு காப்பகத்தின் நன்னீர் கூறு பாசன நோக்கங்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட இயற்கை வெப்பமண்டல நன்னீர் ஈரநிலங்களால் உருவாக்கப்பட்டது. பழையார் ஆறு நன்னீர் சதுப்பு நிலங்களை மாவட்டத்தின் மிகப்பெரிய முகத்துவாரமான மணக்குடி காயல் வழியாக இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது.

📷 படக் காட்சியகம்