கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்
விழாக்கள்
- பொங்கல் விழா
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
- குமரித்திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் குமரித்திருவிழா பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் கொண்டு நடத்தப்படுகிறது.
- வாவுபலி பொருட்காட்சி – குழித்துறை
ஒவ்வொரு ஆண்டும் குழித்துறையில் நடைபெறும் வாவுபலி பொருட்காட்சியில் சுற்றுலாத்துறை சார்பாக அரங்கம் அமைத்து சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் முக்கிய சுற்றுலா தலங்கள் பற்றிய புகைப்படங்கள் அரங்கத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.
- கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் விழாக்கள்
- வைகாசி விசாகத் திருநாள் 10 நாள் கொண்டாடப்படும்.
- நவராத்திரி திருவிழா 10 நாள் கொண்டாடப்படும்.
- திருக்கார்த்திகை திருவிழா ஒரு நாள் கொண்டாடப்படும்.
- ஆடி அமாவாசை திருவிழா ஒரு நாள் கொண்டாடப்படும்.
- தை அமாவாசை திருவிழா ஒரு நாள் கொண்டாடப்படும்.
- அருள்மிகு தாணுமலையான் திருக்கோவில் விழாக்கள் – சுசீந்திரம்
- மார்ச் மாதம்
ஒவ்வொரு தமிழ் ஆண்டின் மாத கடைசி செவ்வாய் கிழமையில் மாசி மகம் விழா கொண்டாடப்படும்.
ஏப்ரல் மாதம்
ஒவ்வொரு தமிழ் ஆண்டு சித்திரை திருவிழா கொண்டாடப்படும்.
ஆகஸ்ட் மாதம்
ஒவ்வொரு தமிழ் ஆண்டு ஆவணி மாதம் விழா கொண்டாடப்படும்.
டிசம்பர் மாதம்
மார்கழி மாத விழா கொண்டாடப்படும்.
அருள்மிகு பவகதி அம்மன் திருக்கோவில் மண்டைக்காடு
மாசித்திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலை, ‘பெண்களின் சபரிமலை‘ என்றும் அழைப்பார்கள். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். இந்த கோவிலில் மாசி திருவிழா 10 நாட்கள் நடக்கும்
அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், தீபாராதனை நடந்தது. பின்னர் மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது
விழாவையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மதியம் உச்சிகால பூஜையும், அன்னதானமும் நடந மாலையில் ராஜராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும் நடைபெற். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தீபாராதனை, உச்சிகால பூஜை, அம்மன் பவனி வருதல், அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது.
நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜையும், ஏழாம் நாள் இரவு 10 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலமும் நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாள் நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி நடைபெறும்.
புனித சவேரியார் ஆலயம் கோட்டார், நாகா்கோவில்
ஆண்டுத் திருவிழா நவம்பா் – டிசம்பா் மாதத்தில் 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.